வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆமாம் அவரும் நீங்களும் கூட்டாளி தானே
தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது. கீழடி உள்ளிட்ட தொன்மைகளை வெளியிட காலம் தாழ்த்துகிறது. நீட் தேர்வு உள்ளிட்ட, தமிழக மக்களின் எண்ணங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. ஒரு கோடியே, 15 லட்சம் மகளிருக்கு உதவித்தொகை தமிழகத்தில் வழங்கப்படுகிறது. 45 லட்சம் பேர், 'நான் முதல்வன்' திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். இளைஞர்கள் எங்களோடு உள்ளனர்; அவர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு செய்த தமிழக அரசைப் பார்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு விமர்சிக்க உரிமையில்லை. தமிழகத்தின் உரிமை பறிபோய் உள்ளது என கூப்பாடு போடுகிறார். என்ன உரிமை பறிபோனது என, அவர் சொல்ல வேண்டும். 'எந்த தேர்தலிலும் ஒன்று சேர மாட்டோம்' என, ஆர்ப்பரிப்போடு சொன்ன பழனிசாமி, பா.ஜ.,வோடு கைகோர்த்துக் கொண்டது ஏன்? அவர் சொன்னதை அவரே மீறலாமா?செந்தில் பாலாஜிமுன்னாள் அமைச்சர்
ஆமாம் அவரும் நீங்களும் கூட்டாளி தானே