உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் போடலாமே? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டாஸ் போடலாமே? ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

மதுரை: 'கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? ' என ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.தமிழகத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., பா.ம.க,, தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், மாணவர்கள் குட்கா பயன்படுத்துவது குறித்து நீதிபதி பரத சக்ரவர்த்தி தாமாக முன்வந்து விசாரணை நடத்தினார். அப்போது தமிழக அரசு தரப்பில்,'குட்கா பொருட்களை அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்து விற்கின்றனர். குட்கா பொருட்கள் விற்பனை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்' என வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட, ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி பரத சக்வரத்தி சரமாரி கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது: * குட்கா பயன்பாட்டில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க வேண்டும்.* கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? * கூல் லிப், குட்கா பொருட்களை நிரந்தரமாக தடை செய்வது குறித்து வழிகாட்டுதல் பிறப்பிக்கப்படும்.* கூல் லிப், குட்கா பயன்பாடுகளில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும். கூலி லிப், குட்கா பொருட்கள் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது.* குட்கா பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முற்றிலுமே தடை செய்ய முடியும்.* குட்காவை நிரந்தரமாக தடை செய்வது குறித்து அரசுகளுக்கு உரிய உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும். இவ்வாறு நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். தீர்ப்புக்காக வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்புசாமி
அக் 05, 2024 03:23

இதே கேள்விகளை உச்சநீதி மன்றத்துக்கு அனுப்பி இந்தியா முழுவதும் கூல் லிப், குட்காவை தடை செய்து பாரத ரத்னா அவார்ட் வாங்கிரலாமே யுவர் ஆனர்.


raja
அக் 04, 2024 17:21

கொள்ளை கூட்ட திருட்டு திராவிட கோவால் புற குடும்பத்தை பற்றி எதிராக கருத்து போடுபவர்களை மட்டும் தான் குண்டாசில் கைது செய்வார்கள் இந்த விடியல் மாடல் அரசில்...


karthik
அக் 04, 2024 16:11

இங்கே இருக்கும் அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்கள் மீது குண்டாஸ் போடும்.


sankar
அக் 04, 2024 14:04

"குட்கா பொருட்கள் விற்பனை விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்"- அப்படின்னா இங்கே இருக்கும் அரசு என்ன செய்யும்


raja
அக் 04, 2024 19:00

குட்கா போதை பொருள் விற்கும், கடத்தும்... வரலாறு சொல்கிறதே ஜாபார் சாதிக்கு கதை தெரியுமா உங்களுக்கு...


முக்கிய வீடியோ