பிற மதம் குறித்து பேசலாமா? ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் பழைய பேட்டையில் ஹிந்துக்கள் ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் பகுதியில் பத்திரப்பதிவு மற்றும் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பவர்களிடம், வக்பு வாரியத்திலிருந்து தடையில்லா சான்று பெற, அரசு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். திடீரென அரசு அதிகாரிகள், இப்படியொரு நெருக்கடி கொடுப்பது, அப்பகுதியில் வசிப்போருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு துறை அதிகாரிகள் மற்றும் வக்பு வாரியத்தை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் கடந்த அக்., 2ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார், மாநிலச்செயலர் குற்றாலநாதன் உட்பட ஏழு பேர் மீது, பிற மதம் குறித்து விரோதமாக பேசியது; கலவரத்தைத் துாண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.