உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்க: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்க: தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2017 ல் நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நாங்கள் எதிர்த்து வருகிறோம். மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்தில் தமிழகம் நாட்டிற்கு முன்னுதாரணமாக உள்ளது. நீட் தேர்வு குறித்து அசைக்க முடியாத கருத்தொற்றுமை நிலவுகிறது. தமிழ்நாடு மருத்து படிப்புக்கான சேர்க்கை சட்டம் நிறைவேற்றபட்டது. ஆனால் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. முனைவர் அனந்தகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் அனைத்து தொழில் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அடித்தளமிட்டார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

மாணவர்கள் பெரும் அதிர்ச்சி

நீட் தேர்வுக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தின் குரல் இந்தியா முழுவதும் ஒலிக்க துவங்கி இருக்கிறது. மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கடிதம் எழுதியுள்ளனர். இதனை தொடர்ந்து நாங்களும் தீர்மானம் நிறைவேற்ற முனைந்துள்ளோம். நீட்தேர்வு முறைகேடுகளில் பல காலம் கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும், அவசியமற்றதும், மாநில அரசின் உரிமையை பறிக்கும் விதமான நீட் தேர்வை முழுமையாக நீக்க வேண்டும். தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை திருத்த வேண்டும். இந்த தீர்மானத்தை இந்த சபையில் நிறைவேற்றி தர உறுப்பினர்களை வேண்டி கேட்டு கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

xyzabc
ஜூலை 02, 2024 12:34

This is like saying I will reduce the railway fare during LS campaign time. Sad that TN மக்கள் are brain washed by these politicians.


Hassan Kuthus
ஜூலை 01, 2024 12:11

நீட் NEET தேர்வு தேவையற்றது என்று நாம் கூறினாலும் ஒன்றிய அரசு கேட்கபோவது இல்லை. ஆகையால், நீதி மன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யலாம், அதில் சம வாய்ப்பு வேண்டி, யாரு எல்லாம் மறுமுறை தேர்வு எழுதிக்கிறார்களோ அவர்கள் மீண்டும் +2 தேர்வு + நீட் எழுத உத்தரவு இட வேண்டும்.


sundarsvpr
ஜூன் 30, 2024 18:47

தேர்வு தேவை இல்லை. அதுபோல் சட்ட மன்றம் பாராளுமன்றங்களுக்கு தேர்தல் எதற்கு.? திருஉள்ளசீட்டு மூலம் தேர்வு செய்யலாமே


vadivelu
ஜூன் 29, 2024 14:08

இவ்வளவு நல்ல காரணங்கள் வச்சு இருக்கீங்க, ஏன் உச்ச நீதிமன்றம் சென்று நீட் தேர்வுக்கு விலக்கு அங்க கூடாது. சும்மா நடக்காது என்று தெரிந்தும் வருடா வருடம் தீர்மானம் போட்டு என பயன்


spr
ஜூன் 29, 2024 11:48

சாராயம், போதை மருந்துப் பழக்கம் இவை குறித்தெல்லாம் பேசாத துப்பில்லாத நம் முதல்வரும் அவர் கட்சியினரும் நீட் தேர்வு குறித்துப் பேசுவதற்கு தகுதியுள்ளவர்கள் அல்ல. நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் களையப்பட வேண்டும். அதற்கான பயிற்சி அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட வேண்டுமென்று போராடுவதில் நியாயம் இருக்கிறது ஆனால் வாய்ப்புக்கள் குறைவாக இருந்தால், இது போன்ற வடிகட்டுதல்கள் நிகழத்தான் செய்யும் இதனை ஏற்க மறுத்தால் நாளை அரசு பணிகளுக்கு தேர்வு, நேர்காணல் இவையெல்லாமே கூட வேண்டாமென்றொரு வாதமும் கிளம்பும் வேட்பாளரையே நேர்காணல் மூலம் தேர்வு செய்யும் கட்சித் தலைமை நாளை அதனையும் நிறுத்துமா


karutthu
ஜூன் 30, 2024 17:10

அப்படியென்றால் GATE TED SLET NELT JEE UPSC TNPSC போன்ற தேர்வுகளும் தேவை இல்லை என்று எதிர்த்து போராடுவீர்களா ?


கௌதம்
ஜூன் 28, 2024 19:40

அதை ஏன் மோடி கிட்ட சொல்றீங்க? வெட்கம் மானம் சூடு சொரனை கொண்ட உலக மகா மானஸ்தன் உதயநிதிகிட்ட கேட்க வேண்டியது தானே? எத்தனை நாளைக்கு இதையே வைத்து உருட்ட போகிறீர்கள்? நீட்டால் தற்கொலை செய்கிறார்கள் என்றால் சாராயத்தால் வளமாக வாழ்கிறார்களா?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 28, 2024 22:11

உங்களுக்குத் தெரியாதா ?? அந்த மானஸ்தன் நீட்டை ஒழித்தது போல இப்போது சனாதனத்தை ஒழிப்பதில் பிசி .....


Kumar
ஜூன் 28, 2024 18:26

உலக மகா ஏமாற்று நாடகம்.


venugopal s
ஜூன் 28, 2024 18:18

நீட் தேர்வு மற்றும் மருத்துவப் படிப்பு குறித்த புரிதல் இங்கு நிறையப் பேருக்கு இல்லை. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எண்பது சதவிகித இடங்கள் தமிழக மாணவர்களுக்கு மெரிட் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள இருபது சதவிகிதம் இடங்கள் மெரிட் அடிப்படையில் வேறு மாநில மாணவர்களுக்கு அகில இந்திய கோட்டாவில் ஒதுக்கப் பட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லூரியில் முன்பு தமிழக மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு மார்க் அடிப்படையிலும் இப்போது நீட் தேர்வு மார்க் அடிப்படையிலும் சேர்க்கப் படுகின்றனர்.பிளஸ் டூ மார்க் அடிப்படையில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம். ஆனால் நீட் தேர்வு அடிப்படையில் பயிற்சி மையங்கள் அதிகம் உள்ள நகர்ப்புற மற்றும் வசதியுள்ள மாணவர்களுக்கே வாய்ப்பு அதிகம் . அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஃபீஸ் மிகவும் குறைவு, வருடத்துக்கு ஐம்பதாயிரம் கூட இல்லை.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஐம்பது சதவீதம் மெரிட் அடிப்படையில் தமிழக மாணவர்களுக்கான அரசு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை. மீதமுள்ள ஐம்பது சதவீதம் மேனேஜ்மென்ட் கோட்டா.இதில் அந்த தனியார் கல்லூரி எந்த மாநிலத்தைச் சேர்ந்த மாணவருக்கும் அவர்கள் விருப்பம் போல் இடம் கொடுக்கலாம். இதிலும் முன்பு ப்ளஸ் டூ மார்க் அடிப்படையிலும் இப்போது நீட் தேர்வு மார்க் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறுகிறது, அதில் மாற்றம் இல்லை. ஆனால் அரசு ஒதுக்கீட்டில் மெரிட் அடிப்படையில் சேர வேண்டும் என்றாலும் கூட அரசு நிர்ணயித்த ஃபீஸ் வருடத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் ஐந்தரை ஆண்டுகளுக்கு முப்பது லட்சத்துக்கும் கூடுதல்.இது அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம்,கேப்பிடேஷன் ஃபீஸ் அல்ல.அது வேறு.இதுவே சாதாரண நிலையில் உள்ள மாணவர்கள் எவருக்குமே சாத்தியப் படாத ஒன்று.நீட் தேர்வுக்கு முன்பும் இதே நிலைதான் இப்போதும் இதே நிலைதான், மாற்றம் ஒன்றும் இல்லை. மீதமுள்ள ஐம்பது சதவீதம் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ஒரு கோடிக்கும் மேல் கறுப்புப் பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கு மேல் இந்த முப்பது நாற்பது லட்சம் ஃபீஸும் கட்ட வேண்டும்.இந்த மேனேஜ்மென்ட் கோட்டாவில் முன்பு ப்ளஸ் டூ வில் தொண்ணூற்றி எட்டு சதவீதம் எடுத்த மாணவனுக்கு பண வசதி இல்லாவிட்டால் இடம் கிடைக்காது வெறும் ஐம்பது சதவீதம் எடுத்த மாணவனுக்கு இடம் கிடைத்தது.இப்போதும் இந்த நிலையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. நீட் தேர்வில் அறுநூறு மதிப்பெண் மார்க் எடுத்து ஏழை மாணவனுக்கு இடம் கிடைக்காது ஆனால் நீட் தேர்வில் வெறும் நூற்றைம்பது மார்க் எடுத்த வசதி படைத்த மாணவனுக்கு கிடைக்கும்.அதனால் நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு உதவவில்லை என்பதே உண்மை!


Barakat Ali
ஜூன் 28, 2024 19:53

திமுக அடிமைகளுக்குதான் புரிதல் இல்லை ..... நீட் தேறி வருபவர்கள் சாதாரண மற்றும் நடுத்தரக் குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ...... ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது என்கிற மோசடி வார்த்தைகள் பொய்யாகிப்போயின ..... அவர்களில் பலர் கோச்சிங் சென்றதும் இல்லை .... நீட் வந்த பொழுது அதை ஆதரித்தது திமுக .... மீத்தேன் திட்டம் உடன்பாடு செய்ததே திமுகதான் .... இவற்றையெல்லாம் பிறகு முன்னணியில் எதிர்ப்பதும் திமுகதான் ..... தமிழகத்தைப் பிடித்த நோய் திமுக ...


Varadarajan Nagarajan
ஜூன் 28, 2024 18:04

தனியார் பொறியியற் கல்லூரிகளில் சில சதவிகித சீட்களை அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் மூலம் நிரப்புகிறது. அதேபோல தனியார் மருத்துவ கலோரிகளிலும் நீட் தேர்வு மூலம் மத்திய அரசு நிரப்புகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் நீட் தேர்வை பற்றி மீண்டும் மீண்டும் பேசுவது பலன் அளிக்காது. அதற்க்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காணவேண்டியதுதானே. அங்கு போனால் என்ன நடக்கும் என்று தெரியும். இந்த விஷயத்தில் முற்றுப்புள்ளி வைக்க அனைத்து தனியார் மருத்துவ கலோரிகளையும் அரசுடைமையாக்கவேண்டியதுதான் தீர்வு


வாய்மையே வெல்லும்
ஜூன் 28, 2024 17:24

நீட் மாஜிக்/ செப்புடு வித்தை தெரிஞ்சவர் ஒரு கோடம்பாக்க அரசிய்லவ்யாதி மானஸ்தர் இருந்தாரு . கண்டா வரசொல்லுங்க


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை