கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதா?
இந்திய தேர்தல் ஆணையம் சமீப காலமாக அறிவிக்கக்கூடிய பல அறிவிப்புகள், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக உள்ளன. தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரு காரணத்தை மட்டுமே கூறி, கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளனர். அதற்கான உரிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. இதை, சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஜனநாயகத்தில் பல தரப்பட்ட மக்களின் உணர்வுகள், கோரிக்கைகள், உரிமைகளை நிலைநாட்டவே, அரசியல் கட்சிகள் துவங்கி நடத்தப்படுகின்றன. தேர்தலில் களம் காண்கிற போது, கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தமும் நெருக்கடியும் ஏற்படுவது இயல்பு தான்; அது தவிர்க்க முடியாதது. அதற்காக, மனிதநேய ஜனநாயக கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையம் சொல்லும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. - தமிமுன் அன்சாரி தலைவர், மனித நேய ஜனநாயக கட்சி