உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்

தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்போர் முட்டாள்கள்: தர்மேந்திர பிரதான் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : ''தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது,'' என மதுரையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்த தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: ராமேஸ்வரத்தில் காசி தமிழ்ச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். பிரதமர் வழிகாட்டுதல்படி, கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழியே கல்வி முறையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தான் கல்வி போதிக்கும் மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கை. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., அரசு, தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.'திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றலாம்' என்ற நீதிபதியின் தீர்ப்புக்கு அனுமதி மறுத்து, அரசியல் ரீதியாக, இதை தமிழக அரசு கையாளுவது கண்டிக்கத்தக்கது. ஹிந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை தடுக்க கூடியவர்கள் முட்டாள்கள். அவர்களுக்கு சிவபெருமான் பாடம் புகட்டுவார். தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை பிரிக்க முடியாதோ, அதுபோல்தான் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரை சந்தித்த பூரணசந்திரன் குடும்பம்

மதுரை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து இறந்த பூர்ணசந்திரன் குடும்பத்தினரை சந்தித்தார். பூர்ணசந்திரனின் தந்தையும், சகோதரனும் அமைச்சரிடம், ''பூரணசந்திரன் விருப்பப்படி, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். அவரது குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும்,'' என கேட்டுக் கொண்டனர். பூரண சந்திரனின் மனைவி இந்துமதி சார்பில் மனுவையும் அமைச்சரிடம் வழங்கினர்.

நிதியை முதல்ல விடுவிங்க

தமிழக பிள்ளைகளுக்கு சேர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழகத்தில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ., அரசு ஆர்வம் காட்டுகிறது. இதைத்தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மதுரையில் தன் கருத்தாக வெளிப்படுத்தி உள்ளார். முதல்ல நிதியை விடுவிச்சுட்டு, மற்றதை பேசுங்க.கனிமொழி, எம்.பி., - தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Delhi Balaraman
ஜன 01, 2026 15:07

அமைச்சர் என்கிற பதவியில் இருந்து தமிழக மக்கள் மனதில் நீக்கம் பெற்றவர். காரணம் எம் மண்ணில் உதித்து கல்வி பயிலும் சிறார்களுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை மறுத்த போதே. நாங்கள் கேட்பது யாசகம் அல்ல. இங்கிருந்து வரி என்கிற போர்வையில் எடுத்து சென்றதை, நீங்கள் கொடுக்க மறுப்பது பணமல்ல எங்களது அன்பு செல்லங்களின் படிப்புக்கான தொகையை. அதைவிடுத்து இந்த கல்லில் தீபமேற்று அந்தக்கல்லில் தீபமேற்று என்று கூற தேவையில்லை ஏனெனில் அது எங்கு எப்பொழுது யாரால் ஏற்றப்பட வேண்டுமோ அது நடந்து முடிந்து விட்டது. நீங்கள் காணும் கலவரத்தை தூண்ட இது உபி யோ ம பி யோ மனிப்பூரோ மற்றும் பீகாரோ அல்ல. இது தமிழ்நாடு பகுத்தறிவளர்கள் புடம் போட்ட மண்.


Subramaniam Mathivanan
ஜன 01, 2026 13:42

ஒரு மதத்தின்மீது அதாவது, தாயின் மீது பற்றுள்ள இந்து முருகனுக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவதே சரியானது என்பான்.


Venkitaswsmy Rangaswamy
ஜன 01, 2026 12:45

தீபம் ஏற்கனவே உச்சி பிள்ளயார் கோவில் அருகே உள்ள தீபத்தூணில் ஏற்றப்பட்டு விட்டது.


தமிழன் மணி
ஜன 01, 2026 11:47

கைக்கூலி சத்தம் அதிகமாகிவிட்டது


vivek
ஜன 01, 2026 12:37

திராவிட சொம்புகளின் மணி சத்தம் அதிகமாகிவிட்டது


arumugam mathavan
டிச 31, 2025 23:14

கனிமொழி தமிழகத்தின் மோசமான மாற்றி மாற்றி பேசும் சுயநலமிக்க அரசியல்வாதி.....உங்க அட்வைஸ் தேவையில்ல...


பேசும் தமிழன்
டிச 31, 2025 21:31

தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் !!!


முருகன்
ஜன 01, 2026 08:22

தீபம் ஏற்ற வேண்டும்.... இதற்கு சிவன் கொடுக்கும் தண்டனை என்ன ?


Delhi Balaraman
ஜன 01, 2026 15:15

அத்தைக்கு மீசை முளைக்கட்டும்


RAMAKRISHNAN NATESAN
டிச 31, 2025 21:29

இன்னைக்கு டிவி விவாத தலைப்பு என்னங்க ? சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு ? கஞ்சா போதையில் சீரழியும் சிறுவர்கள் ..? இல்லைனா போராடும் ஆசிரியர்கள் ? கண்டுக்காத மாடல் அரசு ? அல்லது குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட பெண்கள் ?? அதெல்லாம் இல்ல .. அதிமுக வை கைப்பற்றுவாரா ஓபிஎஸ் & டிடிவி? அதிமுகவை விழுங்குதிறதா பாஜக ? அதிமுகவை முந்துகிறாரா விஜய் ? கேள்விக் குறியாகும் சீமானின் அரசியல் எதிர்காலம்... வலுப்பெறும் அன்புமணி & ராமதாஸ் மோதல்... இப்படி எதையாச்சும் உருட்டுவாங்க...


பேசும் தமிழன்
டிச 31, 2025 21:28

எதுக்கு ...அதிலும் கமிஷன் அடிக்கவா ....கமிஷன் .....கலெக்ஷன் ..... கரப்சன் ....இது தானே உங்களது தாரக மந்திரம் ???


Venugopal S
டிச 31, 2025 21:08

அடுத்தவன் தலை மீது தான் விளக்கேற்றுவோம் என்று பிடிவாதம் பிடிப்பவனை தடுக்காமல் இருப்பது தான் மூடத்தனம் !


RAMAKRISHNAN NATESAN
டிச 31, 2025 22:06

தடுப்பவர்களுக்கு மக்களே 2026 இல் காரியம் செய்வார்கள் .....


கண்ணன்,மேலூர்
டிச 31, 2025 22:10

அப்படின்னா உண்மையில் ஒன்னோட பெயர் வேணுகோபால் இல்லையா?


vivek
டிச 31, 2025 23:38

வீணா போன....வேற என்ன சொல்ல


Kannuchamy Maths
டிச 31, 2025 21:00

தேர்தல் செலவுக்கு ஆட்டய போடுறதுக்கா.....