உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுன்சிலர் கூட ஆக முடியாது; முதல்வரை சொல்கிறார் இ.பி.எஸ்.,

கவுன்சிலர் கூட ஆக முடியாது; முதல்வரை சொல்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால், ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது,'' என்று, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.விருதுநகரில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,சை சரமாரியாக விமர்சனம் செய்தார். 'பொய் சொல்லலாம். பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது' என்றார் ஸ்டாலின்.விமர்சனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், இ.பி.எஸ்., கூறியதாவது:கருணாநிதி குடும்பத்தில் மட்டும் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது.நான் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டுச்சீட்டு இல்லாமல் பேசுகிறேன். ஸ்டாலினும் கடந்த 3 ஆண்டு ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களைப் பற்றி பேசத் தயாரா?அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக, அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி ரத்து செய்து விட்டனர். மடிக்கணினி திட்டம் ரத்து செய்து விட்டனர்.டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இப்போது உரம் தேவை. அது முழுமையாக கிடைக்கவில்லை. திறமையற்ற அரசு நடந்து கொண்டிருக்கிறது.தி.மு.க., 2021 தேர்தலில் வெளியிட்ட, நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து விட்டனர்.கோவையில் 1952 கோடி ரூபாயில் பிரமாண்டமான உயர் மட்டப்பாலம் அ.தி.மு.க., ஆட்சியில் 70 சதவீதம் பணி முடிந்தது. தி.மு.க., ஆட்சி 42 மாதங்கள் நடந்தும் எஞ்சிய பணி முடிக்கவில்லை. காவிரி குண்டாறு இணைப்பு விவசாயிகள் கனவு திட்டம்; திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவர். அதை நாங்கள் தொடங்கினோம். அவர்கள் எந்த பணியும் செய்யாமல் முடக்கி விட்டனர்.பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டும் பணிகளை நாங்கள் தொடங்கினோம் என்பதற்காகவே முடக்கிவிட்டனர்.அ.தி.மு.க., ஆட்சியில் சிறப்பான செயல்பாட்டுக்காக பல்வேறு துறைகள் மத்திய அரசின் விருது பெற்றன.இப்போது சட்டம் ஒழுங்கு இல்லை. இன்று போதைப்பொருள் தாராளமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது. குடும்பத்தை பற்றி சிந்திக்கவே இந்த முதல்வருக்கு நேரம் இல்லை. மக்களை பற்றி கவலைப்படாத முதல்வர் என்றால் இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான்.'எனக்கு திறமையில்லை; விமர்சிக்க அருகதையில்லை' என்கிறார் ஸ்டாலின்.நான் சாதாரண கிளை செயலாளராக இருந்து இவ்வளவு பெரிய இயக்கத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்தவன். உங்களைப்போல், தந்தை அடையாளத்தை வைத்து பதவி பெறுவது எல்லாம் திறமையில்ல.கருணாநிதியின் அடையாளத்தை வைத்துத்தான் ஸ்டாலின் முதல்வர்; கட்சி தலைவர் ஆனார். நான் அப்படியில்லை; சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வந்தவன்.உதயநிதி எந்த தகுதியில் அமைச்சர் ஆனார்? மிசாவில் சிறை சென்றாரா, எத்தனை முறை போராட்டம் நடத்தி சிறை சென்றார்?கருணாநிதியின் பேரன், ஸ்டாலின் மகன் என்பதால் தான் அவருக்கு எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் எல்லாம் கிடைக்கிறது. உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட இலாகாவில் சிறப்பாக செயல்பட்டு 100க்கு 100 மதிப்பெண் பெற்றார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.அப்படியானால் மற்ற அமைச்சர்கள் பெயில் ஆகி விட்டார்களா, அவர்கள் எல்லாம் பணி செய்யவில்லையா?தன் மகன் உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்று முதல்வரே புகழ்ந்து கொள்கிறார்.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. அ.தி.மு.க., தலைமையை ஏற்று வரும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் தான் கூட்டணி. இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

kulandai kannan
நவ 11, 2024 10:17

சபாஷ், சரியான பதிலடி. 100 சத உண்மை


சாண்டில்யன்
நவ 11, 2024 07:44

IGNORANT HE WHO SAYS WHAT I SAY AND KNOW IS TRUE OTHERS ARE WRONG -


Guna Gkrv
நவ 11, 2024 06:22

பேசுவது என்பது ரொம்ப சுலபம் நீங்கள் நல்ல ரயில் ஏறி வந்தவர்கள் ஏன் அந்த பதவிக்கு வரமுடியவில்லை,


Guna Gkrv
நவ 11, 2024 06:12

தம்பி எடப்பாடிக்கு தமிழ் சுட்டு போட்டாலும் வராது அவரு துண்டு சீட் இல்லாமல் பேசுவார் நல்ல காமெடி தம்பி


nv
நவ 11, 2024 05:50

ஒரே ஒரு நல்ல உண்மையை சொல்லி இருக்கிறார் EPS.. வாழ்த்துக்கள்


J.V. Iyer
நவ 11, 2024 04:32

ஈயத்தைப்பார்த்து இளித்துதாம் பித்தளை. எல்லா திராவிஷ கழகங்களும் ஒழியப்படவேண்டிய கட்சிகள். திராவிடம் என்று ஒன்று இல்லாத ஒன்றை இருப்பதாக இவ்வளவு காலம் ஏமாற்றிப்பிழைக்கும் தமிழ் சமுதாய விரோதிகள் இவர்கள்.


Anantharaman Srinivasan
நவ 10, 2024 23:03

ஆமாம். உண்மை. உதயநிதி வட்டசெயலாளராக கூட ஆகியிருக்க முடியாது..


Anantharaman Srinivasan
நவ 10, 2024 23:00

திமுக அதிமுக வை ஒரே மேடையில் எதிரெதிரே வைத்து பட்டிமன்றம் நடத்தினால் மக்களுக்கு தெளிவு கிடைக்கும். தமிழக மக்கள் கூட்டம் அலைபோதும்.


Duruvesan
நவ 10, 2024 21:53

இப்போ கூட ஒன்னும் இல்லை, கூட்டணி இல்லாம நின்னா 50 தொகுதிக்கு மேல டெபாசிட் கெடைக்காது, சின்ன விடியலு டெபாசிட் வாங்குவது கடினம்


ramesh
நவ 10, 2024 21:49

எடப்பாடி முதன் முதலில் செங்கோட்டையன் உதவியால் அரசியல் அறிமுகம் பெற்றார் .பிறகு அவருக்கே ஆப்பு வைத்தார் . பிறகு சசிகலாவின் காலில் விழுந்து முதல்வர் பதவி அடைந்தார் .பிறகு அவரையே கட்சியை விட்டு நீக்கி தன்னுடைய நன்றி விசுவாசத்தை காட்டினார் . இவர் ஒரு அமைதிப்படை அமாவாசை போன்றவர்


raja
நவ 11, 2024 01:16

இருக்கட்டுமே உடன் பிறப்பே... ஆனால் நம் குடும்பம் எப்படி உன் தாதன் கருணாநிதிக்கு முட்டு கொடுத்தார்.. நீ இன்று தத்தி மண்ணு மூட்டை என்று துறை முறுகனால் அறிய பட்ட ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்கிறாய்... உன் மகன் உதைக்கு முட்டு நாளை உன் பேரன் இன்பாவுக்கு முட்டு கொடுப்பான் ... இது தான் பரம்பரை கொத்தடிமை... யோசித்து பார் உன்னால் திமுகவின் தலைவர் ஆக முடியுமா, முதல்வர் ஆக முடியுமா ..ஆதிமுகாவில் அப்படி யில்லையே.... சாதறன தொண்டன் கூட யார் காலில் விலுந்தாவது கட்சி தலைவர் ஆகலாம் முதல்வர் ஆகலாம் அடலீஸ்ட் அமைச்சர் ஆகலாம்... நமது கழகத்தில் இப்படி முடியுமா...கால முழுவதும் நீயும் உன் பரம்பரையும் கொத்தடிமைகள் தான்


ramesh
நவ 11, 2024 10:42

admk வரலாறு தெரியாமல் பேசாதே பரம்பரையாக்காக காலில் விழுந்துகிடக்கும் கொத்தடிமையே .MGR இறந்த உடன் அவரது மனைவி ஜானகி அம்மாள் தான் முதல்வர் ஆனார் .அவரும் பிறகு நடந்த தேர்தலில் படு தோல்வி அடைந்து அரசியலில் இருந்து விளக்கினார் . MGR மற்றும் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை .அதனால் வரவில்லை அது தான் சசிகலா என்ற காஸெட் கடையை நடத்திய பெண்மணியை உடன் பிறவா சகோதரி ஆக்கி தமிழ் நாட்டை சுரண்டும் வேலை கட்சியில் உள்ள மந்திரிகள் மூலம் வசூல் செய்யும் வேலை நடந்ததே .ஊழலுக்கு தண்டனை அடைந்து ஜெயிலுக்கு போனார் . அதனால் தான் எடப்பாடியை முதல்வராகி ஜெயிலுக்குள் போனார் .இதுகூட தெரியாமல் கருத்து போடவந்த கொத்தடிமையே நீ கொத்தடிமை என்று தெரிந்தால் உன் பேரன் கூட உன்னை உதைக்க வருவான் .


raja
நவ 12, 2024 08:05

அதிமுக வரலாறு அப்பன் மகன் பேரன் என்று இல்லையே ...