உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்; போக்குவரத்து ஆணையம் பரிந்துரை

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்; போக்குவரத்து ஆணையம் பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.பொருளாதார வசதி இருப்பவர்கள் தாங்கள் பயணிக்க கார் வாங்குவது அதிகரித்துள்ளது. வீட்டுக்கு ஒரு கார் இருந்த காலம் மாறி, இப்போது வீட்டுக்கு மூன்று, நான்கு, ஐந்து என கார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சென்னையில் 2022ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 92 லட்சம் கார்கள் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6ogtxwxg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் இவற்றை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இல்லை. குறைந்தபட்சம் 30 லட்சம் கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி தேவைப்படுகிறது. ஆனால், பொது இடங்களில் 14000 கார் நிறுத்த மட்டுமே இட வசதி மட்டுமே உள்ளது. மற்ற அனைவரும் கார்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறும் ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காண, கார் வாங்கினால், பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும், என சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.இதனை மாநில வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் ஒரு வாகனத்தை பதிவு செய்வதற்கு வாங்குபவர் பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வீட்டில் ஒரே ஒரு கார் பார்க்கிங் இடம் மட்டுமே இருக்கும். ஆனால் மூன்று கார்கள் வைத்திருப்பார்கள். இரண்டு கார்கள் சாலையில் நிறுத்தப்படும். இது சுற்றுப்புறத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். பார்க்கிங் சான்று என்பது கார் வாங்குவதை கட்டுப்படுத்தவும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கவும் வழி வகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

KRISHNAN R
மார் 13, 2025 16:26

வாய்ப்பே இல்லை ராஜா...


Ramaswamy Jayaraman
மார் 13, 2025 15:42

நல்ல திட்டம். இதே போல் பார்க்கிங் வசதி பொது இடங்களிலும் இருக்க வேண்டும். எல்லா பரிந்துரையும் மக்களை பாதிக்கும் வகையினிலேயே வருகிறது. ஒரு வேளை பரிந்துரை செய்பவர்கள் மனிதர்கள் இல்லயோ


Mr Krish Tamilnadu
மார் 13, 2025 12:33

தொலை நோக்கு பார்வையே, இன்று மக்கள் பணி ஆற்றுப்பவர்களிடம் இல்லை. மின்சார வண்டிகளை எடுத்து கொள்ளுங்கள். அப்போது பெட்ரோல்? பெட்ரோல் நிலையங்கள், அதன் தொழிலாளர்கள், வண்டி ரிப்பேர் செய்பவர்கள், அதை நம்பியவர்களின் வாழ்வாதாரம்?. பெட்ரோல் இறக்குமதி குறைக்க வேண்டும். இல்லாமல் உடனே ஆக்க முடியுமா?. இதற்கு-:சொந்த வாகனங்களுக்கு மட்டும், மின்சார வாகனங்களை அனுமதிக்க வேண்டும். தொழில் ரீதியான வாகனங்கள் - பெட்ரோல் ஆக இருக்க வேண்டும். அல்லது கனரக வாகனங்கள் மட்டுமாவது பெட்ரோல் ஆக இருக்க வேண்டும். மாறும் காலம், அவகாசம், ஏற்படும் பின் விளைவுகள், தீர்வு என யாரும் மக்கள் பணி உயர் மட்ட குழு இன்று தெளிவாக யோசிப்பது இல்லை. பார்க்கிங் - இந்த வருடத்திற்கு பிறகு வாங்கும் வாகனம் - பார்க்கிங் இடம் வேண்டும். இதற்கு முன் வாங்கிய வாகனங்களுக்கு பூங்காக்கள் போல், அருகிலேயே பார்க்கிங் இடங்களை மாநகராட்சி தான் ஏற்படுத்த வேண்டும்.


S.V.Srinivasan
மார் 13, 2025 10:52

இது பரிந்துரையா அல்லது கட்டளையா? ஏன் கேட்கிறேன்னா திராவிட மாடல் ஆட்சி சர்வாதிகாரி ஆட்சின்னு சொல்றாங்க.


P G Sundarrajan
மார் 13, 2025 06:46

பொதுமக்களுக்கு வசதி செய்து கொடுக்க கையாலகாத அரசாங்கம், சட்டம் போட்டு தன்னை தேர்ந்துதேடுத்த மக்களை தண்டிக்குமாம். சாலையோரம் உள்ள குடிசை மற்றும் கடைகளை அகற்றி அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வக்கில்லை. அப்படி ஆகரமிப்புகளை அகற்றினால் எவ்வளவு இடம் கிடைக்கும்? உதாரணத்திற்கு, வடசென்னையில் பாரிமுனையில் உள்ள பர்மா பஜாரை, டெல்லியில் உள்ள பாலிக்கா பஜாரை போன்று ஒரு மார்க்கெட் அமைத்து அங்கு வைத்தால், மொத்த ராஜாஜி சாலையும் சுத்தமாகும். அதே போன்று எண்ணூர் அருகே ஒரு மீன்பிடி துறைமுகம் அமைத்து, சென்னை அயோதிக்குப்பதில் இருப்பவர்களுக்கு, மீன்பிடி துறைமுகம் அருகே அடுக்குமாடி வீடுகள் கொடுத்தால், அயோதி குப்பதை காலி செய்து அங்கே சட்டசபையை கடலோரம் அமைத்தால் அந்த இடமே அழகாகுமே. அதிலேயே அமைச்சர், மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு வீடுகள் மற்றும் எம் எல் ஏ ஹாஸ்டல் அமைத்து கொடுத்தால், அரசாங்கத்தின் போக்குவரத்து செலவு குறையுமே. இதெல்லாம் யோசிக்க மாட்டார்கள். செய்ய மாட்டார்கள். மக்களுக்கு அபராதம் மட்டும் போடுவார்கள். உதாரணத்திற்க்கு தெருவில் குப்பையை கொட்டினால் அபராதம். தினமும் குப்பையை வசூலிக்க வக்கில்லாத அரசால் மக்களுக்கு அபராதம் மட்டுமே போட முடியும். சிகிச்சைக்கு வெளிநாடு போகும் அமைச்சர்கள் அங்கிருக்கும் நல்ல விஷயங்களை இங்கு அமல் செய்யட்டும். நாடு உருப்படும். ஒரு அரசாங்கம் எப்போது, தான் விதிக்கும் அபராதத்தை வருமானமாக நினைக்கிறதோ, அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு வரம்பு நிர்ணயிக்கிறதோ அது கையாலகாத அரசு என்று கொள்ளலாம்.


Bhakt
மார் 13, 2025 01:55

லஞ்சம் வசூலிக்க இன்னொரு வழி?


spr
மார் 12, 2025 19:37

பந்தயம் நடத்த செலவழித்த பணத்தில் தானியங்கி வகையில் கட்டணம் செலுத்தி நிறுத்த பல அடுக்கு மாடி சிற்றுந்து நிறுத்தும் இடம் கட்டியிருக்கலாமே. பெரிய வணிகத் தளங்களை கடைகளை புறநகர்ப் பகுதிக்கு இடமாற்றம் செய்தால் இந்தப் பிரச்சினை குறையுமே .பேருந்து நிலையத்தை எங்கோ அமைத்த அரசுக்கு காலியான கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாகப் போகும் காய்கனிச் சந்தைப் பகுதியில் தானியங்கி வகையில் கட்டணம் செலுத்தி நிறுத்த வசதி செய்யலாமே.சிற்றுந்துகளை வாங்கினால்தான், உற்பத்தி அதிகரிக்கும் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இப்படியும் செய்தால் இந்த மூடத்தனத்தை என்ன விருது கொடுத்துப் பாராட்டலாம் ?


K.aravindhan aravindhan
மார் 12, 2025 18:51

பொதுபார்க்கிங் இல்லாத மாநகராட்சிகளை நகராட்சியாக மாற்றலாம்.


R K Raman
மார் 12, 2025 18:04

ஒரு கார் வைத்திருப்பவர்கள் கூட சாலையில் நிறுத்துவதை என்ன செய்வது


visu
மார் 12, 2025 16:53

இதெல்லாம் பயனற்ற திட்டங்கள் உண்மையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதுதான் சரி ,இல்லை அபராதம் விதிக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை