உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

தஞ்சையில் வேன் - அரசு பஸ் மோதி விபத்து; 5 பேர் பலி

தஞ்சை: தஞ்சை அருகே வேனும், அரசு பஸ்சும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடகாவில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சையின் செங்கிப்பட்டி அருகே மேம்பாலத்தில் வந்த போது, திருச்சியை நோக்கி சென்ற அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழக்க பலி 5 ஆக அதிகரித்தது. மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=42cz0oxs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
மே 22, 2025 17:48

கதி சக்தி ... ஜிந்தாபாத். கண்டவனுக்கு கார் ஹைன். எல்லோரும் டிரைவர் ஹைன். குடும்பத்தோட மேலே ஹைன்.


Kasimani Baskaran
மே 22, 2025 04:03

நான்கு வழித்தடம் என்றால் நடுவில் ஒரு தடுப்பு இருப்பது இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும்.


முக்கிய வீடியோ