உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு

 வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி மனு

'ஜெம்' வீரமணி மீதான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன், வாராகி ஆகியோர், தாக்கல் செய்த பொது நல மனு: இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடந்து வந்தாலும், ஊடகங்கள் யூகத்தின் அடிப்படையில், வழக்கில் அரசியல் கட்சியினரையும், மற்றவர்களையும் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியிடுகின்றன. வீரமணியுடன், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உடனிருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அரசியலாக்கப்படும் வழக்கின் தீவிரத்தை கருதி, விசாரணையை சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கு தொடர்பான போட்டோ, வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி