உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தி.மு.க., எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு 2024 ஜூலை, இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா, வெற்றி பெற்றார். தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜ மாணிக்கம் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதற்கு எதிராகவும் , அன்னியூர் சிவாவின் வெற்றியை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராஜமாணிக்கம் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை' எனக்கூறிய நீதி பதிகள், ராஜமாணிக்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி