மாணிக்கம் தாகூருக்கு எதிரான வழக்கு வாபஸ்
சென்னை: தமிழகத்தில், கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என, அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி, விஜய பிரபாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை, அடுத்தகட்ட விசாரணைக்கு எடுத்து செல்வதை விட, பொது வாழ்வில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை ஏற்ற நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்து உத்தர விட்டார்.