வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கட்டிங் சரியாக போகவில்லையோ ???
ஈஸ்டர் திருநாளில் எல்லாம் சுமுகமாக முடியும். ஆமென்.
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரயில் நிலையம் அருகில் அனுமதி இன்றி மண் திருட்டில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பணகுடி ரயில் நிலையம் அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் இரவு நேரத்தில் மண் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்ற போது, இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி லாரிகளில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். மண் திருடியதாக பணகுடி 13 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மரிய ஷிமோனா டிஜுவின் கணவர் சுதாகர் , சிவகாமிபுரத்தை சேர்ந்த சிவக்குமார், மகேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிவகுமார் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை பணகுடி போலீசார் தேடி வருகின்றனர். மணல் அள்ள பயன்படுத்திய இயந்திரம், லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கட்டிங் சரியாக போகவில்லையோ ???
ஈஸ்டர் திருநாளில் எல்லாம் சுமுகமாக முடியும். ஆமென்.