உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். தமிழகத்தில், 2026ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய நடிகரும், தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் சனிக்கிழமையான நேற்று முன்தினம் (செப் 27) கரூரில் தேர்தல் பிரசாரத்தில் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி, கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். விஜய் பிரசாரத்தில் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, நீதிமன்றம் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யும். அதேநேரத்தில், இந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என தவெக பொதுச்செயலர் ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Thiyagarajan S
செப் 28, 2025 21:02

நயினாரே ஒரு திராவிட பாஜக... கூட ரெண்டு திராவிட பாஜக டலீவர்கள்.... வெளங்கீடும்.... டிம்க வ வலிக்காம திட்டோனும் புரியுதா.....


raja
செப் 28, 2025 20:15

திருட்டு திமுகவின் டேக் டைவர்சன் சிறப்பாக வேலை செய்கிறது....


Barakat Ali
செப் 28, 2025 19:36

கூட்ட நெரிசலில் காயமடைந்த கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார் ......... வழக்குக்கான செலவு அறிவாலயம்தானே ????


s.sivarajan
செப் 28, 2025 18:52

யாருக்கும் எந்த தடையும் தேவையில்லை. நடத்துபவர்களும், கலந்து கொள்பவர்களுமே அனைத்திற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியதுதான். மரத்தில் ஏறுபவனுக்கும் கூரை மேல் ஏறுபவனுக்கும் எதற்கு வீண் போலீஸ் பாதுகாப்பு


Mani . V
செப் 28, 2025 18:02

அனைத்துக் கட்சியினரும் இதைத்தான் எதிர்பார்த்தார்கள். இதில் "டேக் டைவேர்ஷன்" ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்த திமுக வுக்கு கூடுதல் மகிழ்ச்சி. ஆமா, மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் பேனர், தண்ணீர் பாட்டில் ஸ்டிக்கர் இதெல்லாம் முன்னேற்பாடாக திமுக எப்படி தயார் செய்து வைத்து இருந்தது? எது ஆபரேஷனை செய்ய திட்டமிடும் பொழுதே இதையும் திட்டமிட்டு விட்டார்களா? குட் ஜாப்.


vbs manian
செப் 28, 2025 15:54

இந்த லச்சண த்தில் நான் நடனம் ஆடினால் இதை விட பெரிய கூட்டம் வரும் என்று ஒரு நடிகர் பீற்றி கொள்கிறார்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 28, 2025 15:42

கோர்ட்டுக்கு போனது ஒரு உடன்பிறப்பு என்பது கொஞ்ச நாளைக்கு அப்புறம்தான் வெளியில் வரும்.


V Venkatachalam
செப் 28, 2025 21:50

சரி உடன் பிறப்பு ன்னு வச்சிக்குவோம். அந்த உ.பி எதுக்கு விஜய் கூட்டத்துக்கு போச்சு? அப்போ இது திருட்டு தீயமுக வின் சதிதானே? .


Svs Yaadum oore
செப் 28, 2025 15:27

இதுவும் திராவிட நாடகம்தான் ....கோர்ட் தடை விதிக்க முடியாது.....இப்படியே கூட்டம் நடத்தி மேலும் அசம்பாவிதங்கள் நடந்தால் அப்போது விடியல் கை விரித்துவிடும்...நாங்கள் பொறுப்பில்லை என்று ...எல்லாம் திராவிட நாடகம் ..


Murugesan
செப் 28, 2025 15:17

பத்து ரூபா அயோக்கியன் திராவிட கழிசடைகளின் திட்டமிட்ட கொலைகள் காவல்துறை திருடனுங்களின் பங்கு, ஆட்சி மீது சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் ,ஆட்சியை கலைக்க வேண்டும் ,2026 தேர்தல் நியாயமாக நடக்க இது அவசியம்


Svs Yaadum oore
செப் 28, 2025 15:03

சினிமாக்காரனுங்களை வைத்து கல்வியில் சிறந்தது தமிழகம் என்று சொன்னவன் இன்று அதே சினிமாக்காரனை குறை சொல்லும் விடியல் ....