உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்விக்கடன் ரத்து அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு

கல்விக்கடன் ரத்து அமல்படுத்த கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியான கல்விக் கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.திருப்பூரைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில், 2016 முதல் 2024 வரை நடந்த பல்வேறு தேர்தல்களில், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வாக்குறுதி அளித்தன.'தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, கல்விக்கடன் ரத்து திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். போலியாக தேர்தல் வாக்குறுதியை தடுக்க, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

GMM
மார் 27, 2025 07:22

மீண்டும் சம்பாதிக்க முடியாத சூழல் ஏற்படும்போது கடனை ரத்து செய்யலாம். கல்வி பயின்ற பின் பணம் தேடித்தான் ஆகவேண்டும். அதில் ஒரு பகுதியை கடன் அடைக்க உபயோகிக்க முடியும். ஏன் திமுக கட்சிகள் வரி பணத்தில் இருந்து வாக்குறுதி தர வேண்டும்? தேர்தல் ஆணையம் சட்டம் இருந்தால் தான் தடுக்க முடியும். மாநிலம் ஆணையம் நிர்வாக உத்தரவு பிறப்பிக்க முடியும்? சட்டம் தெரியாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தவறு. சட்டம் இன்றி நீதி கருத்து தான் கூற முடியும். என்றும் உத்தரவிட முடியாது.


Thiyagarajan S
மார் 27, 2025 06:46

திமுகவிற்கு எதிரான வழக்கு இது அதனால் இது பட்டியலிடப்படுமா


R.RAMACHANDRAN
மார் 27, 2025 06:39

நாட்டில் வசதியானவர்களுக்கு கடன்கள் பல கொடுத்து வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டு கொடுத்த கடன்களை உரிய காலத்தில் வசூலிக்க ஏற்பாடுகள் செய்வதில்லை.அவர்கள் கடனை திருப்பி செலுத்தாமல் நீதி மன்றம் வரை செல்கின்றனர் கோடி கணக்கில் செலவு செய்து கொண்டு.


raja
மார் 27, 2025 06:06

ஹா ஹா ஹா ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிடன் திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை வாங்கி அவர் மட்டும் தின்று தமிழனாகிய உங்களுக்கு வேறு அல்வா கொடுப்பார் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை