உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி வழக்கு

அண்ணாமலையிடம் விசாரிக்க கோரி வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனு:சென்னை அண்ணா பல்கலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கடந்தாண்டு சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தி.மு.க., அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில், ஜூன் 2ல் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 'ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார் யாரிடம் மொபைல் போனில் பேசினார்' என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.அதுபோல, உரையாடல் தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய அண்ணாமலை, அந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் வழங்கவில்லை. இவ்விவகாரத்தில், அண்ணாமலைக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
ஜூன் 22, 2025 19:54

குற்றம் செய்தவனை கைது செய்ய சொன்ன ஆளை விசாரிக்க வேண்டுமாம்..... என்ன உங்க நியாயம்.... இது தான் திருட்டு மாடல் போல் தெரிகிறது.


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 06:45

ஆதாரங்களை பொது வெளியில் வெளியிட்டு விட்டார். அது பொய் என்றால் தமிழக அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் - இல்லை என்றால் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரிக்கலாம், வழக்குத்தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கலாம். இரண்டும் இல்லாமல் பொதுவெளியில் இருப்பவர்கள் வழக்குத்தொடுக்குமளவுக்கு நிலைமை மோசமானது காவல்த்துறை செயலிழந்து விட்டது என்பதையே காட்டுகிறது..


Rajarajan
ஜூன் 22, 2025 06:10

அப்படியே அண்ணாநகர் கொலை வழக்கு சம்பந்தமா, வைகோ கொடுத்த பேட்டியை வெச்சி, அவர் மேலயும் ஒரு வழக்குப்போட்டா, ரொம்ப புண்ணியமா போகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை