மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago
திருச்சி: ''திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா நடக்காமல் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
பெரம்பலூர் அருகே நடந்த சாலை விபத்தில், அமைச்சர் மரியம்பிச்சை மரணமடைந்ததால், திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு, வரும் அக்., 13ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த, நேற்று காலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் திருச்சி வந்தார்.காலை 11 மணி முதல், கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சியினரையும், அவர் தனித்தனியாகச் சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அதன் பின் கலெக்டர் ஜெயஸ்ரீ, மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரவீண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பெரும்பாலான அரசியல் கட்சிகள், கடந்த தேர்தல் போல பணப்பட்டுவாடா இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளேன். கடந்த தேர்தல் போலவே, இடைத்தேர்தலும் அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் பாதுகாப்புக்கு துணை ராணுவத்தை அனுப்ப, மத்திய அரசைக் கேட்டுள்ளோம். வரும் 26ம் தேதியுடன், வேட்புமனு தாக்கல் முடிகிறது. கடந்த தேர்தல் போலவே, தேர்தல் கமிஷன் மூலம், 'பூத் சிலிப்' வாக்காளர்களுக்கு, தேர்தலுக்கு ஏழு நாட்களுக்கு முன், வீடுகளில் வினியோகிக்கப்படும்.
சட்டசபைத் தேர்தலின் போது பிடிபட்ட, 5 கோடி ரூபாய் பணம் குறித்து, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சட்டசபைத் தேர்தலில், 6,000 வழக்குகள் பதிவு செய்ததில், 200 மட்டுமே நிலுவையில் உள்ளன.திருச்சி மேற்குத் தொகுதியின் தேர்தல் பார்வையாளராக, வருமான வரித்துறை அதிகாரி நிவேதிகா பிஸ்வால், நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணப்பட்டுவாடா முழுமையாகத் தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் வரவுள்ளதால், 'மை' பிரச்னை குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும்.இவ்வாறு, பிரவீண்குமார் கூறினார்.
9 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago