உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேரை போலீசார் நீதிக்குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தேர்வுக் காலம் என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத இளைஞர் நீதிக்குழும நீதிபதி, கண்டித்து அறிவுரை கூறி அனுப்பினார்.திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 மாணவர்களை அவதூறாக குறிப்பிடும் வார்த்தைகளை பள்ளி மேஜைகளில் எழுதி வைத்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது, மேலும் இது ஜாதி ரீதியாகத் தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தில், ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்கள் நான்கு பேரையும் போலீசார் திருநெல்வேலி இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர் செய்தனர். தற்போது தேர்வுக் காலம் என்பதால், 'இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என அவர்களை எச்சரித்த நீதிபதி, கடும் நடவடிக்கை எடுக்காமல், கண்டித்து அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
மார் 23, 2025 21:41

மோதும் மாணவர்களுக்கு தேர்வு நடப்பது தெரியாதா ? பின்னால நாலு போட்டு அனுப்பிச்சா ஜென்மத்துக்கும் மோதல் வராது


m.arunachalam
மார் 23, 2025 21:09

கொம்பு சீவி விடுபவர்களை கூப்பிட்டு எச்சரிக்கை விட வேண்டும் .


Ray
மார் 23, 2025 21:01

தேர்வு முடிந்தவுடன் சீட்டைக் கிழித்து வெளியேற்றவேண்டும்