உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது வீட்டில் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். அண்மையில் சென்னையில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்த 50 பேர் கொண்ட கும்பல், வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியது. வீட்டுக்குள் மனித கழிவு கலந்த சாக்கடை நீரை ஊற்றி அட்டகாசம் செய்தது. அந்த கும்பல், வீட்டில் இருந்த சங்கரின் தாயாரையும் மிரட்டி விட்டு சென்றது.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு தமிழக போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு அன்றே ஜாமினில் விடுவிக்கப்படவில்லை. எனினும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும், சம்பவத்தின் பின்னணியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இருப்பதாகவும், சவுக்கு சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, அவரது வீட்டில் 3 மணி நேரத்திற்கு மேல் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sankaranarayanan
ஏப் 16, 2025 19:28

அப்பாடா வெகுநாள்கள் கழித்து இப்போதுதான் அரசு முழித்துக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது சில நாளில் அது ஒன்றுமே இல்லை என்றுதான் அறிக்கை வெளிவரும் அதையம் மீறி வெளி வந்தால் அதில் ஒன்று இல்லை என்றுதான் வரும் இது என்ன வந்தால் ஏன்னா வராவிட்டால் என்ன ஒரு பயனும் கிடையாது.


JEE
ஏப் 16, 2025 17:24

அறிவுள்ள எவனும், மனித நேய முள்ள எவனும் இந்த செயலை கண்டிக்காத விடமாட்டான், போதை பிரியர்கள், ஊபீசு, அடிமை நாய்கள் தவிர


G Mahalingam
ஏப் 16, 2025 15:22

சிபிசிஐடி பெயரை திமுக ஆட்சியில் நம்பிக்கை இல்லாமல் ஆக்கி விட்டார்கள். யாராட ஏமாற்றி வருகிறீர்கள்


saiprakash
ஏப் 16, 2025 15:11

சங்கிகள் மற்றும் அதிமுக,சீமான் இந்த குரூப்பை சேர்ந்தவர்கள் தான் முட்டு கொடுப்பானுக ,அறிவுள்ள எவரும் இவனை ஆதரிக்கமாட்டார்கள்


bala
ஏப் 16, 2025 16:46

ஆக மொத்தம் உபி களுக்கு மட்டுமே அறிவு இருக்கிறது என்று அர்த்தம். இல்லயா?


Keshavan.J
ஏப் 16, 2025 18:09

உன் பெயர் சாய் பிரகாஷ் நீயே சங்கி பெயரை வச்சிக்கின்னு மற்றவர்களை சாங்கி என்கிறாய். பெயரை பொன்முடி இல்லை பிங்காமுடி என்று மாற்றிகோள். அந்த சாய் உன்னை சாய்க்கட்டும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஏப் 16, 2025 20:08

என்ன மூர்க்ஸ் புது பேரு ஷோக்கா கீது பா


Shekar
ஏப் 16, 2025 14:19

விசாரணை முடிவில் தெரிய வந்தது என்னவென்றால், சவுக்கு சங்கர் மாறுவேடத்தில் வந்து, தன்வீட்டில் கழிவுகளை கொட்டி, நல்லாட்சி தரும் முதல்வர் பெயரை களங்கப்படுத்த செய்த முயற்சி என்று தோன்றுகிறது.


Karuthu kirukkan
ஏப் 16, 2025 14:07

அன்றாட வாழ்வில் இதுவும் ஒரு நாடகமே தலைப்பு " விசாரணை " முடிவில்லை தொடரும்....


P Karthikeyan
ஏப் 16, 2025 13:50

சவுக்கு சங்கர் அவர் குடியிருந்த வீட்டை அப்போவே காலி செய்துவிட்டார் ..அன்றே கழுவி சுத்தம் செய்தாகிவிட்டது. இப்போ எப்படி அந்த வீட்டுக்கு சென்று விசாரணை செய்யமுடியும் ..


Dharmavaan
ஏப் 16, 2025 13:26

கண் துடைப்பு வேலை மக்களை/ சட்டத்தை ஏமாற்ற


திராவிடிய ஐயர்
ஏப் 16, 2025 12:49

சம்பவம் நடந்தது எப்ப? விசாரணை எப்ப?. என்னத்தே..