உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு

கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: தவெக வழக்கு

சென்னை: கரூர் துயர சம்பவத்துக்கு சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தவெக கோரியுள்ளது.தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது. வக்கீல் அறிவழகன் தலைமையிலான தவெக குழுவினர் இந்த முறையீட்டை தாக்கல் செய்தனர். இந்த முறையீடு, இன்று 29ம் தேதி மதுரை அமர்வில் மதியம் 2:15 மணிக்கு விசாரிக்கப்பட உள்ளது. இத்தகவலை தவெக நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ராமகிருஷ்ணன்
செப் 29, 2025 15:28

டிவிக்க விஜயின் ஜனநாயகன் படத்தின் பெயரை கரூரின் பிணநாயகன் என்று மாற்றி விடவும். படம் ஓஹோ என்று ஓடும். காசை அள்ளி விடலாம்


Gnana Subramani
செப் 28, 2025 16:04

விபத்து நடந்ததும் பாதிக்கப் பட்டவர்களை சந்திக்காமல் விஜய் விமானம் பிடித்து வீட்டுக்கு வந்தது, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் வீட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது பற்றியும் விசாரிக்க வேண்டும்


GUNA SEKARAN
செப் 28, 2025 15:27

திரு மிகு எம்ஜியார் அவர்கள் கிராமம் கிராமமாக ஒரு பேருந்தில் தான் சென்றார். நகரங்களுக்கும் சனிக்கிழமைகளிலும் மட்டும் செல்லவில்லை அவர் உண்மையிலேயே மக்கள் திலகம் தான். இந்த போலி நடிகர் விஜய் மன்னிப்பு கூட கேட்காமல் உடனே அங்கேயே தங்கி இருந்து தேவையான உதவிகளை செய்யாமல் ஓடிச்சென்றவர் தானே. தலைவர் என்றால் தைரியம் துணிவு முன்னிற்றல் வேண்டும். குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வந்த மாக்களையும் நொந்துக்கொள்ளத்தான் வேண்டும். மரணித்த ஆத்மாக்கள் அமைதி அடையட்டும்.


pakalavan
செப் 28, 2025 15:08

இதற்கு முழு காரணம் தவெக நிர்வாகிகள்தான், 6:30 மனிக்கே 3 உயிர் போய்விட்டது, குடித்துவிட்டு வாகனப்பேரனி, தாமத வருகை, என பல காரணங்கள், மரத்தின் மீது மின்சார கம்பிகள் உள்ள இடத்தில் தவெக தொன்டர்கள் ஏறி நின்று ஆட்டம் போட்டு அலப்பறை செய்தனர்


Perumal Pillai
செப் 28, 2025 15:01

40 பேர் சாவுக்கு காரணமானவர்களே சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் .கூத்தாடி ஜோசப் விஜய் எப்படி மடை மாற்றம் செய்ய முயல்கிறார் பாருங்க. இந்த அறிவு இல்லாத கூத்தாடி பயலுக்கு கட்சி தேவையா ? இவனை நாடு கடத்த வேண்டும் அல்லது சிறையில் அடைக்க வேண்டும் .


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 28, 2025 14:24

வேறு கட்சிகளுக்கே இடமில்லை... களத்தில் நாம் இருவர் மட்டுமே... அதுக்கு என்ன செய்யலாம்.. இப்படி மோதிக்கொள்வது ஒன்றே வழி....


R. SUKUMAR CHEZHIAN
செப் 28, 2025 14:22

அரசியல் அரிச்சுவடி தெரியாத இந்த திராவிட கூத்தாடி விஜய் ஒரே நேரத்தில் மத்திய அரசையும் அரசியல் அயோக்கியத்தனதில் கறைகண்ட திமுகாவையும் பகைத்துக் கொண்டது இவர் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவர் என்பதையே காட்டுகிறது. இத்தனைக்கும் மத்திய அரசு இந்த கூத்தாடிக்கு மத்திய பாதுகாப்பையும் கொடுத்தது.


Thravisham
செப் 28, 2025 14:05

எம்ஜியாருக்கு வராத கூட்டமா இந்த இடியட்டுக்கு வந்து விட்டது? இவனை பார்க்க கை குழந்தையோடு/சிறுவ சிறுமியோடு வந்த பெற்றோரை எப்படி வைய வேண்டும்?


saravan
செப் 28, 2025 13:50

ஆனால் விசாரணை முடியும் வரை விஜயை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் தொண்டன் செத்திருக்கிறான் இவன் ஒரு மாதம் உள்ளே இருக்கக் கூடாதா என்னை கேட்டால் இவனே குற்றவாளி காலதாமதமாக வந்தாய் அதற்கான ஏற்பாடு உன் கட்சி என்ன செய்தது


KRISHNAVEL
செப் 28, 2025 13:44

மிகசரியான முடிவு, இவர்களே ஆணையம் அமைத்து, இவர்களது அதிகாரிகளையே விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தால் எப்படி நம்புவது, ஆனாலும் பிரயோசனமற்ற வழக்கு தான் யாரும் தண்டிக்க பட மாட்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை