உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து பணம் பறிப்பு ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை

சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து பணம் பறிப்பு ராஜஸ்தான் விரைகிறது தனிப்படை

சென்னை:சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், 'சைபர் கிரைம்' குற்றவாளிகள், வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைதளம் வாயிலாக, பங்குச் சந்தை முதலீடு குறித்து ஆலோசனை வழங்குவது போல, 'லிங்க்' அனுப்புகின்றனர். அதை, 'கிளிக்' செய்தால் தொடர்பு கொள்வர்.இவர்களின் பேச்சுக்கு செவி சாய்த்தால், வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவர். அதேபோல, 'பெடக்ஸ்' நிறுவனம் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்கள் வாயிலாக வெளிநாடுகளுக்கு போதை பொருள் பார்சல் அனுப்பி உள்ளீர்கள் என, சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கின்றனர். சமீபத்தில், தமிழகத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டி உள்ளனர். சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம், 50,000 ரூபாயை சுருட்டிய மர்ம நபர்கள், அதை ராஜஸ்தானில் உள்ள, ஏ.டி.எம்., மையத்தில் இருந்து எடுத்துள்ளனர் என, தெரிய வந்துள்ளது.அதிநவீன தொழில் நுட்பம் வாயிலாக, ஏ.டி.எம்., மையத்தில், 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபரின் உருவப்படத்தை கைப்பற்றி, அதை மென்பொருள் வாயிலாக ஆய்வு செய்து, அந்த நபர் யார் என்ற விபரங்களை சேகரித்துள்ளனர்.அதை ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு அனுப்பி உஷார்படுத்தி உள்ளனர். சில தினங்களில், சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் அம்மாநிலத்திற்கு செல்ல இருப்பதாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ