உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓடிடிக்கு சென்சார் : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

ஓடிடிக்கு சென்சார் : மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புதிய ஒளிபரப்பு கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.சினிமா படங்களை தணிக்கை செய்வதற்கு என்று சென்சார் போர்டு உள்ளது. இங்கு தணிக்கை செய்யப்பட்ட பிறகே, அனைத்து படங்களும் 'ஏ', 'யு', 'யு/ஏ' என்ற சான்றிதழ்களுடன் திரைப்படங்கள் வெளியாகும். தணிக்கையின் போது அதிக வன்முறை, ஆபாசக்காட்சிகள் போன்றவை நீக்கப்படும்.தற்போது ஆன்லைன் வழியாக செயல்படும் ஓ.டி.டி., தளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. மாதந்தோறும் கட்டணம் செலுத்தி திரைப்படங்கள், சீரியல்களை பார்க்க முடியும். மேலும் ஓடிடிக்கு என பிரத்யேகமாக படங்கள், சீரியல்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் இளைஞர்களை கவர்வதற்காக ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால், ஓடிடிக்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்தன.இந்நிலையில், சென்னையில் நிருபர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது: புதிய ஒளிபரப்புக் கொள்கை மூலம் ஓடிடிக்கு சென்சார் கொண்டு வரப்படும். கோவாவில் 8 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது.அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதை. காஷ்மீரில் நடந்த உண்மை சம்பவத்தையே அமரன் படத்தில் காட்டி உள்ளனர். நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் சினிமாவின் தேவை இன்று அதிகரித்து உள்ளது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

SP
நவ 10, 2024 10:53

சென்சார் போர்டு அனுமதித்த திரைபடங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுங்கள்.


Iniyan
நவ 10, 2024 01:18

அறிக்கை விடுவதை தவிர வேறு ஒன்றும் உருப்படியாக செய்யமாட்டார்.இவரை வைத்து கொண்டு வளராது.


SUBBU,MADURAI
நவ 10, 2024 08:59

ஆளும் திமுக அரசுக்கு ஆதரவாக உண்மை செய்திகளை மறைத்து பொய்யை பரப்புரை செய்து கொண்டிருக்கும் தமிழக RSB மீடியாக்கள் பண்ணும் அடாவடிகளுக்கு கடிவாளம் போட துப்பு இல்லை இவருக்கு இந்த லெட்சணத்தில் OTT க்கு சென்சார் போடப் போறாராம். மோடி அரசு இவருடைய திறமை என்ன என்பதை அறிந்திருந்தும் எம்.பி தேர்தலில் தோல்வி அடைந்த இவரை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாவது முறையும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருப்பது தவறான செயலாகும் இதுவரையில் இந்த அமைச்சர் எல்.முருகன் தமிழகத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. பட்டியல் இனத்தவர்களில் இவரைவிட நன்கு திறமையானவர்கள் பலர் இருக்க அவர்களுக்கு எல்லாம் இந்த பதவியை கொடுக்காமல் இவருக்கு இந்த முக்கிய துறையை கொடுத்தது கிரிமினல் வேஸ்ட்...


பூபதி
நவ 10, 2024 00:28

சாருக்கு யு டியூபில் இருக்கும் படங்கள் பத்தி தெரியாது போலிருக்கு.


அன்பு
நவ 09, 2024 23:47

நடந்த, நடந்து கொண்டிருக்கிற சம்பவங்களை, பயங்கரவாத செயல்களை, வன்முறைகளை வெளிப்பாடு செய்தால் அது எப்படி ஒட்டு மொத்த சமூகத்துக்கு எதிரானது என்று கூறி ஆர்பாட்டம் செய்ய முடியும்.


புதிய வீடியோ