உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மக்கள் தொகை கணக்கெடுப்பு; டிரான்ஸ்பருக்கு கட்டுப்பாடு 

 மக்கள் தொகை கணக்கெடுப்பு; டிரான்ஸ்பருக்கு கட்டுப்பாடு 

சிவகங்கை: மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய தற்காலிக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க உள்ளது. முதற்கட்டமாக வரும் ஜூலை 17 முதல் ஆக., 30 வரை வீடுகள், அவற்றில் உள்ள பொருட்கள் பற்றிய கணக்கெடுப்பும் 2ம் கட்டமாக 2027 பிப்., 1 முதல் மார்ச் 31 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபடும் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. முதற்கட்ட கணக்கெடுப்பில் ஈடுபடும் அலுவலர், ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய தற்காலிக கட்டுப்பாடு விதித்து பொது நிர்வாகத்துறை அரசு செயலர் லட்சுமிபிரியா உத்தரவிட்டுள்ளார். புதிய இடத்தில் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அந்தந்த துறை செயலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ