உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

விருதுநகர் ஜவுளி பூங்கா பணிகளுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

விருதுநகர் :விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள ஜவுளி பூங்காவிற்கு வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகம், தெலுங்கானா, ம.பி., உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா இ.குமாரலிங்கபுரத்தில் 1052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் அமைக்க முடிவானது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.ஒரு துணியின் துவக்கம் முதல் இறுதி வரை என்னென்ன தொழில் செய்யப்படுகின்றனவோ அதற்கான ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளன.இதுவரை 11 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. தாமிரபரணி குடிநீர் வசதிக்காக தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மத்திய ஜவுளித்துறை பி.எம்.மித்ரா ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்த வளர்ச்சிப்பணிகளுக்காக ரூ.1894 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சரி செய்ய 15 பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 5 பூங்கா வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த உள்ளதாகவும், ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு வரவுள்ளதாகவும்தெரிவித்துள்ளது.கட்டுமானப் பணிகள் 2026 செப். ல் நிறைவு பெறும். 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் விரைவில் கார்மென்ட் ஆலைகள், உள்வட்ட ரோடு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

venugopal s
ஜூலை 02, 2025 17:39

திட்டத்துக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கி கொடுத்தது தமிழக அரசு, திட்டத்துக்கான மொத்த நிதியில் நாற்பத்தி ஒன்பது சதவீதம் ஒதுக்கி உள்ளது தமிழக அரசு. திட்டத்தில் அதிகமான பங்களிப்பு மாநில அரசு, ஆனால் பெயர் மட்டும் மத்திய அரசின் திட்டமாம், ஸ்டிக்கர் ஒட்டுவது யார் என்று செய்தியை முழுவதுமாக படித்தவர்களுக்கு விளங்கும்!


Kjp
ஜூலை 02, 2025 09:24

ஸ்டிக்கர் ஒட்ட மாடில அரசுக்கு ஒரு நல்ல சான்ஸ் நடக்கட்டும் நடக்கட்டும்.


GMM
ஜூலை 02, 2025 07:52

விருதுநகர் ஜவுளி உற்பத்தி, வியாபாரம் செய்த இடம் கிடையாது. ஜவுளி பூங்கா அமைக்க ஏற்ற இடம் கிடையாது? இதனை சுற்றி ஜவுளி தொழில் பயிற்சி பெற்ற மக்கள் அதிகம் பல ஆண்டுகள் முன் வாழவில்லை. இந்த ஊர் அரசியல் அழுத்தத்தில் தேர்வு செய்ய பட்டு இருக்க வேண்டும். மதுரை முதல் தென்காசி வரை பல ஊர்களில் பஞ்சு மில், ஜவுளி கூடம், ஜவுளி உற்பத்தி, ஜவுளி விற்பனை உண்டு. வாக்கு வங்கி மக்கள் இல்லை. அவர்கள் பிரதிநிதிகள் இல்லை. உழைக்கும் மக்கள் அதிகம். வாக்கு வங்கி தான் விருதுபட்டியை விருது நகர் ஆக்கியது.?


Rajasekar Jayaraman
ஜூலை 02, 2025 07:25

ஸ்டிக்கர் எங்கே ஸ்டிக்கர் எங்கே சீக்கிரமாக ஒட்டினால் தான் நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை