உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய பா.ஜ., வழங்கவில்லை எனக்கூறி வரும் 29 ம் தேதி அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கும் என தி.மு.க., அறிிவித்து உள்ளது.இது தொடர்பாக தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு துறையிலும் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என எந்த திட்டங்களும் இல்லை. ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 இடங்களில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும். நம் மாநில உரிமைக்கான போராட்டம் மட்டும் அல்ல. நாள்தோறும் நாட்டைமுன்னேற்றிடும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் பாதிக்கப்பட்ட ஏழை ஆண், பெண் தொழிலாளர்கள் பங்கேற்க செய்ய வேண்டும். உழைத்தவர்கள் ஓடாய் தேய்கிற வரை உழைப்பை உறிஞ்சிவிட்டு சம்பளத்தை தர மறுக்கிறது மத்திய அரசு. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 21:13

மத சார்பின்மையை வஞ்சிக்கும் திமுக அரசு என்று எழுதினால் என்ன சொல்வாரு சொல்பேச்சு வீரர் ?


Ramesh Sargam
மார் 27, 2025 20:20

ஹிந்துக்களை வஞ்சிக்கும் திமுக அரசு.


Iyer
மார் 27, 2025 19:55

தமிழ்நாட்டின் கெஜ்ரிவால்.எதற்கு எடுத்தாலும் மத்திய அரசின் மீது குற்றம்சாட்டுதல், பழிசுமத்தல் . மோதி ஷாவிடம் உங்கள் தந்திரங்கள் பலிக்காது. கெஜ்ரிவாலைப்போல் உங்களையும் வீழ்த்திவிடுவார்கள்


Velan Iyengaar, Sydney
மார் 27, 2025 18:35

10 லட்சம் கோடி கடன். இதுல வெட்டி உதார்...ஆட தெரியாத ஆட்டக்காரி மேடை சரி இல்லை என்று சொன்னாளம்...கேவலம்...ஆனால் இந்த கடித கதறல் இனிமை .


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 06:09

எப்பா எவ்வளவு கோவமான வார்த்தைகள் , அனால் நிஜத்தை பேசியுள்ளீர்


venugopal s
மார் 27, 2025 18:21

செவிடனுக்கு காது கேட்காது என்பதற்காக நமது வேலையான சங்கை ஊதாமல் இருக்க முடியுமா? ஊதிக் கொண்டே இருப்போம்!


நிக்கோல்தாம்சன்
மார் 29, 2025 06:10

ஏனுங்க காது கேக்காது , ஒருவேளை விக்கு வைத்திருப்பாரோ அதனால் கேக்காம போயிடுச்சா ?


இந்தியன்
மார் 27, 2025 17:58

திராவிட மாடல் தேவையில்லை நமக்கு...


raja
மார் 27, 2025 17:54

ஆட்சி செய்ய தெரியலைன்ன ஆட்சியை விட்டு ஒடுங்க...


sankar
மார் 27, 2025 17:18

அதே ஓட்ட ரிக்கார்டு - வேற ஏதாவது சொல்லு அப்பா


Dharmavaan
மார் 27, 2025 17:02

கொள்ளை அடிக்க பணம் வரவில்லை எனவே கூப்பாடு ஓநாய் அழுகிறது ஆடு நனைகிரது என்று


karthik
மார் 27, 2025 16:55

தமிழக ஹிந்துக்களை வஞ்சிக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் டம்ளக்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை