உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலவசமாக ஏ.ஐ., பாடங்கள் வழங்குகிறது மத்திய அரசு

இலவசமாக ஏ.ஐ., பாடங்கள் வழங்குகிறது மத்திய அரசு

சென்னை: மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அறிவை மேம்படுத்த, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஐந்து பாடங்கள், இணைய வழியில் இலவசமாக வழங்கப் படுகின்றன. மாணவர்களின் எதிர்காலம் இனி புத்தகங்களோடு நின்றுவிட போவதில்லை. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப, மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம். அதற்கு வழிகாட்டும் வகையில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், கல்வி இணையதளமான, 'swayam.gov.in' வழியாக, ஐந்து விதமான செயற்கை நுண்ணறிவு கல்வி, சுதந்திர தினத்தையொட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. நாட்டின் சிறந்த ஐ.ஐ.டி., பேராசிரியர்களால், கணினி பொறியியல், தரவு அறிவியல், கிரிக்கெட் கணக்கியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளதை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இலவசமாக பெறலாம். இதில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படை, பைதான் நிரலாக்கம், தரவு காட்சிப்படுத்தல் மற்றும் இயந்திர கற்றல் போன்றவற்றின் வாயிலாக கற்பிக்கப்படும். வணிகவியல், மேலாண்மை பின்னணி உள்ள மாணவர்களுக்கு, கணக்கியல், ஆட்டோமேஷன், ஸ்மார்ட் பகுப்பாய்வு போன்றவை, செயற்கை நுண்ணறிவு வாயிலாக கற்பிக்கப்படுகிறது. இதற்கு மாணவர்கள், 'https://swayam.gov.in' என்ற இணையதளம் வழியாக சேரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை