வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எஜமான் மரத்தில் இருந்து பறவை போட்டிருக்கும்..... வருவாய் பத்திரம் வாகனம் வருமான வரி..... இப்படியே பல மரத்தில் பறவைகள்..
சேலம்: சேலத்தில், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த மத்திய அரசு அதிகாரியிடம் இருந்து, 2.50 கோடி ரூபாயை பறிமுதல் செய்து, சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ், 'பி.இ.எஸ்.ஓ' எனும் பெட்ரோலியம் மற்றும் வெடி மருந்து பாதுகாப்பு அமைப்பு செயல்படுகிறது. இதன் தென் மண்டல அலுவலகம், சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி நகரில் உள்ளது. நட்சத்திர ஹோட்டல் இதன் சர்க்கிள் அலுவலகம், வேலுாரில் உள்ளது. இந்த அலுவலகங்கள் வாயிலாக, பெட்ரோல் நிலையங்கள், பெட்ரோல் பொருட்கள் எடுத்து செல்லும் வாகனங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள், வெடி மருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேலுார் அலுவலகத்தில், வெடி பொருட்கள் கட்டுப்பாட்டாளராக கணேஷ் என்பவர் பணிபுரிகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ், சேலம், தர்மபுரி என, 10 மாவட்டங்கள் வருகின்றன. இவர், சேலத்தில் நட் சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அவரிடம் கோடிக்கணக்கில் லஞ்சப்பணம் இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சி.பி.ஐ., விசாரணை இதையடுத்து, சென்னையில் இருந்து சென்ற சி.பி.ஐ., அதிகாரிகள், கணேஷ் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர். நேற்று அவரிடம் இருந்து, 2.50 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து, கணேஷிடம் சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
எஜமான் மரத்தில் இருந்து பறவை போட்டிருக்கும்..... வருவாய் பத்திரம் வாகனம் வருமான வரி..... இப்படியே பல மரத்தில் பறவைகள்..