உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்

தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன்: 'தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம்' என, காங்., - பா.ஜ., இரு கட்சிகளும் கூறி வந்தன; ஆனால், அதை செயல்படுத்தவில்லை. இதற்கு கால வரையறை நிர்ணயித்து, மத்திய அரசு சட்டம் இயற்றி, அதை அமல்படுத்த வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சீட்டு வாயிலாக ஓட்டளிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஆதரவில்லை.டவுட் தனபாலு: தமிழகத்துல, உங்க கட்சியின் ஆதரவுல தானே, 39 தொகுதிகள்லயும் வெற்றிக்கனியை பறிக்க பா.ஜ., திட்டமிட்டிருக்குது... அதனால, பெரிய மனசு பண்ணி, உங்க முடிவை மறுபரிசீலனை பண்ணுங்க... உங்க முடிவுல தான், பா.ஜ.,வின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கு என்பதில், 'டவுட்'டே இல்லை!முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கோடநாடு கொலை குற்றவாளிகளை கண்டறிந்து,தண்டனை பெற்று தருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இதுவரை எதுவும் செய்யவில்லை. கோடநாடு கொலை,- கொள்ளை விஷயத்தில், முதல்வர் என்ன சொன்னாரோ, அதை செய்ய வேண்டும். மக்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்ற வேண்டும். உலகத்திலேயே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் கூட்டணி அமைத்து செயல்படுவது தமிழகத்தில் தான்.டவுட் தனபாலு: மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த எத்தனையோ வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்குதே... அதை பற்றி கவலைப்படாம, கோடநாடு வழக்குல மட்டும் இவர் குறியாக இருப்பது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!மத்திய தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்: ஏழை குடும்பத்தில் இருந்து பிரதமர் மோடி வந்துள்ளார்; அதனால் அவருக்கு, ஏழைகள் கஷ்டம் நன்கு தெரியும். மத்திய அரசின் எல்லா திட்டங்களும் ஏழை, எளிய மக்கள் வரை அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வங்கிகளில் குறைந்த வட்டிக்கு கடன் தரப்படுகிறது. பிரதமரும் சாலையோரம் டீக்கடை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.டவுட் தனபாலு: பிரதமர் மோடி, எவ்வளவோ உயரத்துக்கு வந்த பிறகும், பழசை மறக்காமல் இருக்காரு என்பதில், மாற்றுக் கருத்துக்கே இடமில்லை... அதனால, அவரே மூன்றாவது முறையாகவும் அந்த பதவிக்கு வருவார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Nagamani Nagarajan
ஜன 09, 2024 18:19

இன்னும் எத்தனை தலைமுறைக்கு இட ஒதுக்கீடு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இதில் ஜாதியை ஒழிக்கவேண்டுமாம்.


Siva
ஜன 09, 2024 14:53

இந்த இடஒதுக்கிடாதல தான் நாடு கெட்டு குட்டிசுவராகி போகுது..


Kanakala Subbudu
ஜன 09, 2024 12:07

தனியார் நிறுவனங்கள் பொதுவாக திறமைக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதையும் கெடுத்து விட்டால் தமிழ்நாடு உருப்பட்டாப்போலதான்


Siva
ஜன 09, 2024 11:24

இந்த இடஒதுக்கிடால தான் நாடு கெட்டு குட்டிசுவராகி போகுது.. இதுல தனியார்ல இட ஒதுக்கீடு


Sampath Kumar
ஜன 09, 2024 09:57

அரசு துறையிலே இடஒதிக்கீடு முனையாக அமல் படுத்த படவில்லை இதில் தனியார் துறையிலும் வேண்டும் என்றால் உண்ணு பண்ணுக உங்க சாதி சன்னதி கூடி ஒரு கம்பெனி ஆரம்பித்து அதுல உங்க ஆள்களுக்கு மட்டும் வேலை கொடுங்க இனி எல்லா சதிகார பலம் இப்படி தான் செய்வானுக பாருங்க


Rajasekar Jayaraman
ஜன 09, 2024 09:56

இந்திய தொழில் துறையை முடக்க சீனா செய்யும் வேலை.


Rajarajan
ஜன 09, 2024 09:28

முதலில் இவர்களது சொந்த நிறுவனங்களில், இடவொதுக்கீடு கொண்டு வரட்டும் பாப்போம். ACS / ICWA / CA / TECHNOLOGY / PRODUCTS / MANAGEMENT போன்ற சவால் நிறைந்த படிப்புகளில் சாதிப்பவர்கள், பெரும்பாலும் பிராமணர். இந்த இடங்களை, தனியார் நிறுவனங்கள் இடவொதுக்கீடு முறையில் மற்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு கொடுத்தால், காலம் பூராவும் ஆட்கள் கிடைக்காமல் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டிவரும். பரவாயில்லையா ?? மேலும் அவர்கள் தொழிற்சங்கம் / ஜாதி சங்கம் அமைத்து, நிர்வாகத்தை இழுத்து மூடிவிடுவர். அரசியலுக்காக, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறுவது தவறு. அடக்கிவாசித்தல் நலம். அரசியல் வேறு, நிர்வாகம் வேறு.


Muralidharan raghavan
ஜன 09, 2024 10:54

யதார்த்தமான உண்மை . இது பேச்சளவில் மட்டுமே இருக்கும் செயல்பாட்டிற்கு வராது. எனக்கு தெரிந்து பிற்பட்ட சமுதாயத்தை சார்ந்த முதலாளிகள் கூட ஜாதி அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது இல்லை. அங்கு திறமை என்பதற்குத்தான் முக்கியம். மேலும் இந்த விஷயத்தில் தலையிட அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பது தெரியவில்லை. அவ்வாறு திணிக்கும்பட்சத்தில் THOZHILGAL PAATHIKKAPADUM VAAIPPULLATHU


veeramani
ஜன 09, 2024 09:25

இட ஒதிக்கீடு தனியார் தொழிற்ச்சாலைகளில்..... என்ன அடிமுட்டாள்தனம் இந்த அயோக்யர்களுக்கு. தனியார் தனது பணம் போட்டு உருவாக்கிய தொழில்களில் நட்டம் வராமல் இருக்க உழைப்பவர்களையே வேலைக்கு அமர்த்துவார். அன்றைய தொலை தொடர்பு துறை, தபால் துறை, அநேக மத்திய அரசு நிறுவனங்கள் - ஹிந்துஸ்தான் வாட்ச், ஹெச் எம் டி ..இதே போல பலவற்றை எடுத்துகொள்ளலாம். இந்தியர்களின் முன்னேற்றம் இடஒதிக்கீட்டினால் ஒடு க்கப்படுகிறது. விரைவில் இடஒதுக்கீடு தவிர்க்கப்படவேண்டும்.


vbs manian
ஜன 09, 2024 09:03

தனியார் துறையில் இட ஒதுக்கீடு.இந்தியா குட்டிசுவராக போக நல்ல வழி.


C.SRIRAM
ஜன 09, 2024 06:52

இந்த வெட்டி அரசியல் வியாதியின் நிதி பின் புலத்தை ஆராய வேண்டும் . ஏதோ மா புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று உளறிக்கொண்டிருக்கிறான் . ஏதத்ற்கு தனியார் முதலீடு செய்து அதில் ஜாதி வாரி ஒதுக்கீடு தரவேண்டும். கேட்பதிலும் ஒரு நியாயம் வேண்டாமா கூமுட்டை அரசியல் வியாதியே .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை