உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: 'மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்தாவது மத்திய அரசிற்கு வெட்கம் வந்து நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன்' என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.சிவகங்கையில் நிருபர்கள் சந்திப்பில் ப.சிதம்பரம் கூறியதாவது: மாநில அரசு மத்திய அரசின் கல்வி கொள்கைக்காக நிதி ஒதுக்கியதை தான் வரவேற்கிறேன். மாநில அரசு நிதி ஒதுக்கியதை பார்த்து வெட்கம் வந்தாவது மத்திய அரசு நிதியை ஒதுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.பட்ஜெட் லட்சினை மாற்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு, 'அந்த குறீயீடு என்பதை பயன்படுத்துவதாக இருந்தால் பயன்படுத்தலாம் அதனை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. அந்த குறியீடு என்பது முக்கியமல்ல.அதற்கு பின்னாள் வரும் எண்களே முக்கியம். அதில் ஆயிரம் ஒதுக்குகிறார்களா? அல்லது 0 ஒதுக்குகிறார்களா? என பார்க்க வேண்டும்' என ப.சிதம்பரம் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

தத்வமசி
மார் 14, 2025 19:49

வீட்டிலேயே எவ்வளவு நாள் இருப்பது.அவ்வப்போது தலையை காட்ட வேண்டாமா ? இவரு நிதி அமைச்சராக இருந்தவரு தானே.. ஒரு கேள்வி இவருக்கு. ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த திட்டத்தில் சேராத மாநிலத்திற்கு அளிப்பதற்கு மத்திய அரசுக்கு சட்டம் இடம் தருமா ? திட்டத்தில் சேரவே இல்லை. மாட்டோம் என்று அடம் பிடிப்பவர்களுக்கு எப்படி அதற்க்குண்டான பணம் கொடுப்பது ? நவோதயா பள்ளிகள் நடைபெறுகிறது. அவற்றுக்கான தொகையை ஒவ்வொரு மாநிலமும் பெறுகிறது. ஆனால் தமிழகத்திற்கு கிடையாது. ஏன் ? நவோதயா பள்ளி திட்டத்தில் தமிழகம் சேரவில்லை. அதனால் இல்லை. அது போலத் தான் இதுவும். திட்டத்தில் சேர்ந்தால் பணம், இல்லையென்றால் இல்லை. சாமானியனுக்கும் புரியும் விவகாரம். தேவையில்லாமல் ஊதி பெரியதாக்கி கடைசியில் சாதிக்க எதுவும் இல்லை. இதுவும் புஸ்வானம் தான்.


தாமரை மலர்கிறது
மார் 14, 2025 19:37

பத்து பைசா கிடைக்காது. பேராசை படாதே.


sankaranarayanan
மார் 14, 2025 19:02

மாநில அரசு கல்விக்காக நிதி ஒதுக்கியதை பார்த்தாவது மத்திய அரசிற்கு வெட்கம் வந்து நிதியை விடுவிக்கும் என நம்புகிறேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இப்படி சொல்ல மாஜி ஊழல்மிகுந்த மத்திய அமைச்சருக்கே வெட்கம் இல்லை ஒரே நாளில் பங்கு சந்தையை வீழ்த்தி புள்ளையாண்டாயனுக்கு பங்குகள் மலிவாக வாங்கிக்குவித்த படுபாவி ஆச்சே உம்மை மறக்கவே முடியாது லண்டனில் புள்ளையாண்டான் பேரில் மாளிகை உள்ளதே எப்படி உழைத்தா வாங்கினது? பேசாதே அப்புறம் கதை கந்தலாகிவிடும் .


Venkateswaran Rajaram
மார் 14, 2025 18:54

மொத்தமா கொள்ளை அடிச்சிட்டு போய்ட்டு இப்ப இந்த கிழவனுக்கு நிதி வேண்டுமாம்


Madras Madra
மார் 14, 2025 17:59

இப்படி ஒரு கருத்து சொல்ல கூட ஏதாவது வாங்கியிருப்பர் இவுரு பேசுறாரு இவிங்க ஆட்சியில தான் முமொழி கொள்கையே வந்தது திமுக அப்ப தூங்கி கொண்டு இருந்தது


MARUTHU PANDIAR
மார் 14, 2025 17:53

கிங் பின் சம்மனில்லாம ஆஜராவுறது இது தான் புதுசா ? நல்ல நிலையில் இருந்த 500, 1000 ரூபாய் அச்ச டிக்கும் மிஷினை நமது ரிசர்வ் வங்கியிடமிருந்து பாகிஸ்தான் கையில் குடுத்து நம் நாட்டு பொருளாதாரத்தை நாசமாக்கிய யோக்கியன். தமிழகத்தில் இந்தியை வளர்க்க இந்த ஆள் எடுக்காத நடவடிக்கையா? நிற்க சில மனிதர்ளுக்கு 80 ஐ தாண்டினால் சிந்தனை மேம் பட்டு தெளிவு அதிகரிக்குமாம் ..சிலருக்கு புத்தி பேதலிக்குமாம் அப்படீங்கறாங்க.


Iyer
மார் 14, 2025 16:52

சில ஆயிரம் கொடுத்து ஜாமீனில் வெளிவரமுடியாமல் - பல ஏழைகள் பல வருடங்களாகியும் தவிக்கிறார்கள். ஆனால் நம்பிகை துரோகம் செய்து நாட்டை கொள்ளை இட்டு பொருளாதாரத்தை வீணடித்த - சிதம்பரம், லாலு, கெஜ்ரி, போன்ற துரோகிகள் சுதந்திரமாக உலவி வருகிறார்கள். மோதி அடுத்தபடியாக நமது நீதித்துறையை சுத்தப்படுத்துவர் என நம்புகிறேன்


Iyer
மார் 14, 2025 16:44

இவரைப்போன்ற ஆட்கள் இன்னும் சுதந்திரமாக உலவிவருகிறார்கள் என்ற உண்மையே போதும் - நமது நீதித்துறை எவ்வளவு ஊழலில் மூழ்கி உள்ளது என்பது. நாட்டையே கொள்ளை அடித்த இவர் இன்னும் பத்திரிகைகளில் எழுதுகிறார், பேட்டி கொடுக்கிறார்


B MAADHAVAN
மார் 14, 2025 16:35

சுய லாபத்திற்காக நாட்டைக் கெடுத்து குட்டிச் சுவராக்கக் கூடத் தயங்காத மனுஷன். இவர் எல்லாம் பேச வந்துட்டார். இந்த ஆள் எப்படிப் பட்ட குணாதிசயங்களை கொண்ட மனிதர் என்றால், உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொடுப்பீர்கள்... எங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவீர்கள் என்ற உதாரணத்திற்கு பொருத்தமான ஆள். நல்ல குடும்பத்தில் பிறந்ததனால், ஆண்டவன் கொடுத்த அற்புதமான மூளையை, தவறாக பயன்படுத்தி வாயை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்துபவர்.


கூமூட்டை
மார் 14, 2025 15:31

இவர் ஜாலி ஜால்ரா மாடல்


புதிய வீடியோ