உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; பால்குடம் எடுத்துச்செல்ல போலீஸ் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா நேற்று நடந்தது. நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீறி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச் சியை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா நடந்தது.நேற்று காலை வேலுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுப்ரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தங்கவேலை சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் சென்று 16 வகை அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 120 படி அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. வழக்கமாக 105 படியில் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக பிரசாதம் வழங்கப்பட்டது.மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல் மற்றும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்பு பூப்பல்லக்கில் வேல் வீதி உலா சென்று மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், சுமதி, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர். வேல் மலைமேல் செல்லும் விழாவிற்காக கோயிலில் கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.பால்குடம் சுமந்து செல்ல தடை நேற்று காலை அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் பால்குடம் சுமந்து மலை மீது செல்வதற்காக கோயில் கருப்பசாமியை வழிபட்டு புறப்பட்டார். கோயிலுக்குள் அவரை போலீசார் தடுத்து, 'மலைமேல் பால்குடம் கொண்டு செல்லும் புதிய பழக்கத்தை உருவாக்காதீர்கள். சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குடத்தை செலுத்துங்கள்' என்றனர்.அதற்கு ராமலிங்கம், 'மலையின் அடிவாரத்தில் மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அபிஷேகம் அனைத்தும் அவரது கரத்திலுள்ள தங்கவேலுக்கு தான் நடக்கிறது. அந்த வேல் மலை மேல் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சுனை தீர்த்தத்தில் பாலாபிஷேகம் நடக்கிறது. அதற்காகத்தான் நான் 48 நாள் விரதம் மேற்கொண்டு பால் குடம் எடுத்து செல்கிறேன்' என்றார்.போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் மதுரை வீரன், 'நீதிமன்றத்தில் அனுமதி பெற்று செல்லுங்கள். பால்குடம் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது. அதை பையில் வைத்து கொண்டு செல்லுங்கள்' என்றனர். அதன்படியே ராமலிங்கம் மலை மேல் கொண்டு சென்று நேர்த்தி கடன் செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sankaranarayanan
அக் 18, 2025 21:28

பால் குடத்திற்கு பதிலாக சாராய தண்ணீர் நிறைந்த குடங்களை எடுத்து சென்றால் அனுமதி கிடைக்கும்


N Annamalai
அக் 18, 2025 18:48

அடுத்த அடி அடிமேல் ஆடி அடுத்து பணம் பெற்றுக் கொண்டு ஒட்டு போடக் கூடாது .அப்போ தெரியும் ஹிந்துக்களின் வலிமை .


thangam
அக் 18, 2025 18:09

திருட்டு திராவிடத்தை விரட்டியடிக்கவும்


Raj
அக் 18, 2025 17:08

இந்த காவலர்கள் கஞ்சா, கள்ள சாராயம் விற்பவர்களை பிடிக்க மாட்டார்கள், பால் குடம் கொண்டு போவர்களை பிடிப்பார்கள். கேவலம்.


Rajkumar Ramamoorthy
அக் 18, 2025 16:09

பால் குடத்தில் என்ன தப்பு


K V Ramadoss
அக் 18, 2025 14:23

அது என்ன பால் குடம் தலையில் எடுத்துச் செல்லக் கூடாது , பையில் எடுத்துச் செல்லுங்கள் என்று கூறுவது ..எந்தச்சட்டம் அப்படி சொல்கிறது ?


D Natarajan
அக் 18, 2025 14:16

இதெற்க்கெல்லாம் தீர்வு காண ஒரே வழி 2026 மட்டும் தான். ஹிந்துக்களே ஒற்றுமையாய் இருந்து இந்த டிராவிடனை விரட்டி அடியுங்கள்


chinnamanibalan
அக் 18, 2025 13:31

கோவிலுக்கு சென்று வழிபடுவது, நேர்த்தி செலுத்துவது என்பது அவரவர் விருப்பம் மற்றும் உரிமை. காலம் காலமாக நடந்து வரும் ஒவ்வொரு செயலுக்கும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தால், வழிபாட்டு உரிமை கேலிக் கூத்து ஆகி விடும்.


வாய்மையே வெல்லும்
அக் 18, 2025 13:16

ஹிந்து அறநிலைய துறை என்பதே வெத்துவேட்டு . இங்க டுபாக்கூர் ஹிண்டுஅல்லதாவர்கள் தான் பணியில் உள்ளனர். மக்களே உஷார் இனிமேலே திராவிடத்தை வளர்த்தால் நமது பாரம்பரிய தெய்வ வழிபாட்டினை கொல்வார்கள்.. தேவையா நமக்கு ??


Rathna
அக் 18, 2025 11:53

முருகனுக்கு தமிழ் தெய்வம் என்று பெயர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை