உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் ரெடி

சட்டப்பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் ரெடி

சென்னை:சீர்மிகு சட்டப்பள்ளியில், கடந்த 2021, 2022ல் படிப்பை முடித்தவர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படாதது குறித்து, நமது நாளிதழில், 'படிப்பு முடிந்தும் பட்டம் கிடைக்காமல் அல்லாடும் சட்டப்பள்ளி மாணவர்கள்' என்ற தலைப்பில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் மஞ்சுளா, ''சான்றிதழ் பெறாத மாணவர்கள், அலுவலக நாட்களில், பெருங்குடி வளாகத்தில், வளாக முதல்வரிடம் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். அல்லது, சீர்மிகு சட்டப்பள்ளியில், அடுத்த மாதம் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் பெற்றுக் கொள்ளலாம்,'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை