உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகங்கை, ராசிபுரம், சேலத்தில் கொட்டியது கனமழை!

சிவகங்கை, ராசிபுரம், சேலத்தில் கொட்டியது கனமழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில், 15 மாவட்டங்களில், இன்று முதல் 10ம் தேதி வரை, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை: ஆந்திர கடலோர பகுதி களை ஒட்டிய, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல் 10ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல, 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும் 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடமாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக கடலுார் மாவட்டம் மாத்துாரில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், புதுச்சேரி திருக்கானுார், ராமநாதபுரம் தங்கச்சிமடம் பகுதிகளில் தலா 12 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில், இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்: (மில்லி மீட்டரில்)சிவகங்கை- 128.6,ராசிபுரம்- 122,சேலம்- 108.5,திருமயம்- 95,ஆலங்குடி- 88,புதுக்கோட்டை- 84,ஆனைமடுவு அணை- 80,கூடலுார் பஜார்- 75,அப்பர் கூடலுார்- 73,பெருங்காலுார்- 68.2,ஆவுடையார்கோவில்- 67.4,திருப்பத்துார் சிவகங்கை- 66,கந்தர்வக்கோட்டை- 63.6,ஏற்காடு - 63.3,காரைக்குடி- 63,கோடநாடு- 57,பந்தலுார்- 56,ஒகேனக்கல்- 52.4,திருப்பத்துார்- 52,மங்களபுரம்- 50.2,கீழ்கோத்தகிரி எஸ்டேட்- 48,பாம்பார் அணை- 48,திருப்பூர்- 48,கிருஷ்ணகிரி- 47.6,டேனிஷ்பேட்டை- 47,பாப்பிரெட்டிப்பட்டி- 45,விழுப்புரம்- 44, ஆத்துார் சேலம்- 43,ஊத்தங்கரை- 42.6,எருமப்பட்டி- 40,முசிறி- 40,அரூர்- 37.4,பென்னாகரம்- 37.2,அறந்தாங்கி- 36.5,கிளன்மார்கன்- 35,பார்வுட் - 34,திருமானுார்- 33.6,நடுவட்டம்- 32,அரிமளம்- 32,காரையூர்- 31.8,தேன்கனிக்கோட்டை- 31,கோழியனுார்- 31,கரியகோவில் அணை- 30,தொண்டாமுத்துார்- 30,சுத்தமல்லி அணை - 29.1,தேவகோட்டை- 28.6,மதுராந்தகம்- 28,வளவனுார்- 28,விருதுநகர்- 28,நத்தம்- 27,பாலக்கோடு- 25.2,சிங்கம்புணரி- 25.2,புதுச்சத்திரம்- 26,பவானி- 26,பழநி - 25,தளி- 25,நாட்ராம்பள்ளி- 24.5,வானுார்- 23,நாமக்கல்- 21


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை