உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடி, மின்னலுடன் 29ல் மழை பெய்ய வாய்ப்பு

இடி, மின்னலுடன் 29ல் மழை பெய்ய வாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று முன்தினம் நிலவரப்படி வறண்ட வானிலை நிலவியது. பெரும்பாலான இடங்களில், அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், மாலை நேரங்களில் லேசான பனி மூட்டமும் நிலவி வருகிறது. இதேபோல, இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். காலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். வரும் 29ம் தேதி, தென்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ