மேலும் செய்திகள்
முதல்வர் இன்று கோவை பயணம்
20 minutes ago
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு 200 சொகுசு பஸ்கள்
45 minutes ago
கோவை: பெங்களூரு - ஓசூர் ரயில் பாதையில், மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், இன்று ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.எஸ்.ஆர்.பெங்களூரு - எர்ணாகுளம்(12677) எக்ஸ்பிரஸ் ரயில் எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். இந்த ரயில், கார்மெலராம், ஓசூர், தர்மபுரி ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது. கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட்(20642) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயி ல்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது. பெங்களூரு கன்டோன்மென்ட் - கோவை(20641) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்துார் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது.கோவை - லோக்மான்ய திலக்(11014) எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்துார், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். தர்மபுரி, ஓசூர் ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 minutes ago
45 minutes ago