உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்; ராமதாஸ் உறுதி

2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்; ராமதாஸ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.சென்னையில் கோட்டூர்புரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும் என்றார்.பின்னர், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என அமித்ஷா கூறியதாகவும், 2026ல் மாற்றம் வருமா எனவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மாற்றம் வந்து தான் தீர வேண்டும். கட்டாயமாக மாற்றம் வரும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்'' என்று ராமதாஸ் பதிலளித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ராமதாஸ் கூறியது மூலம், தி.மு.க.,வில் பா.ம.க., கூட்டணி இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 09:00

பாமகவில் ராமதாஸிடமிருந்து அன்புமணிக்கு ஆட்சி மாற்றம் ஏற்படப்போவதை அறிவித்துள்ளாயா வயோதிக ராமதாஸ்?


sasidharan
ஜூன் 09, 2025 17:24

கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை. மக்கள் இதை நிச்சயம் செய்வார்கள். லஞ்சம் ,கொலை , கொள்ளை, கற்பழிப்பு இது இல்லாத நாளே இல்லை இந்த ஆட்சியில். மக்கள் மனதில் மாற்றம் கண்டிப்பாக வர வேண்டும்.


Suresh
ஜூன் 09, 2025 21:46

வரும்


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 09, 2025 22:12

ஆண்டிகள் கூடி மடம் தான் கட்ட முடியும் ஆட்சி மாற்றம் உங்களுக்கு ஏமாற்றம் தான் , பெரியவரை DMK சேர்க்க முடியாது என்ற வுடன் பேச்சில் மாற்றம் ,அப்புறம் எதற்கு கட்சியை உடைக்கணும் , பிஜேபி யில் சேர விருப்பம் இல்லை என்றவர் இன்று இப்படி , குடிகாரன் கூட கெ ட்டான்


R MANIVANNAN
ஜூன் 09, 2025 16:59

அதிமுக்க , பிஜேபிக்கு காவடி தூக்குவது திண்ணம்


rajan_subramanian manian
ஜூன் 09, 2025 16:47

இந்த ஜோசப் விஜய் கட்சி பிரிக்கப்போகும் ஓட்டுக்கள் இதுவரை திமுக வைத்திருக்கும் மதம் மாறிய கிருஸ்துவ ஓட்டுக்கள் தான். இஸ்லாமிய வோட்டுகள் திமுக மற்றும் விஜயிடம் பிரியும். இதில் பிஜேபிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அண்ணா திமுக மற்றும் பீஎம்கே கட்சிக்கு அதன் வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சி வாக்குகளும் சேர்ந்தால் திமுக காலி.இன்னும் சில மந்திரிகள் கோர்ட்டு உள்ளே வெளியே விளையாடினால் அதிமுக வெற்றி நிச்சயம். பிரேமா கட்சி பெரிய அளவில் எங்கு சேர்த்தாலும் பாதிப்பு இல்லை. விடியல் விடை பெரும் நேரம் அடுத்த வருடம் நிச்சயம்.


Kalyanaraman
ஜூன் 09, 2025 15:35

தனியாய் நின்று ஒரு சீட் வெற்றி பெறமுடியாத பிஜேபி, சிபிஐ , மற்ற உதிரி கட்சிகள் விட pmk மேல்


Rengaraj
ஜூன் 09, 2025 15:25

மாறி மாறி கட்சி மாறி முதுகில் குத்துவதில் இவர் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட். இந்த மாதிரி முதுகில் குத்துவதில் சமீபத்தில் டிகிரி முடித்த அண்ணாதிமுக தலைமை , மேற்கொண்டு அந்த சப்ஜெக்ட்டில் டாக்டர் பட்டம் வாங்குவதற்கு இவரிடம் டியூஷன் படிக்கப்போகிறார்கள். பாடம் படிக்க தற்போதைய அதிமுகவின் தலைமை தயாராக உள்ளது . ஜாடிக்கு ஏற்ற மூடி


Suresh
ஜூன் 09, 2025 21:47

,, சூப்பர் ...ஜி


sundarsvpr
ஜூன் 09, 2025 15:21

நிச்சியம் ஆட்சியில் மாற்றம் வரும். தி மு க கட்சிதான் அரசு அமைக்கும். கட்சியின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி தலைமையில் மாற்றம் வரும். இதனை குறிப்பிட்டு பேசும் ஆண்மைராமதாஸ்க்கு இல்லை என்பதுதான்


saiprakash
ஜூன் 09, 2025 15:18

பெட்டி பேரம் முடுச்சுடுச்சு போல அதுவும் வெயிட் ஆ கிடைச்சுடுச்சு போல அதுக்குத்தான் அப்பனுக்கும் மகனுக்கும் இத்தனை நாடகங்கள் , இவர்களை நம்பும் வன்னிய மக்களின் நிலைதான் பாவமாக உள்ளது .


Raja k
ஜூன் 09, 2025 14:22

ஓ அப்போ பாஜ கூட்டணினு முடிவு பன்னீட்டிங்க,,,


Krishnamoorthy
ஜூன் 09, 2025 14:22

சுயநலமும் பொதுநலமும் கலந்த அரசியல் வாதிகள் மத்தியில், இவர் சுயநல பச்சோந்தி.


Kjp
ஜூன் 09, 2025 15:37

வயித்த கலக்குதா.பார்த்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை