உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்

சென்னை:ஐ.பி.எஸ்.,கள் இருவர் உட்பட, மூன்று போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். டி.ஜி.பி., அலுவலகத்தில், சட்டம் -ஒழுங்கு பொதுப்பிரிவு ஏ.ஐ.ஜி.,யாக பணிபுரியும் ஸ்ரீநாதா, சென்னை மாநகர போலீஸ் சைபர் குற்றப்பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல, சி.பி.சி.ஐ.டி., தெற்கு மண்டல எஸ்.பி.,யாக பணிபுரியும் முத்தரசி, டி.ஜி.பி., அலுவலகத்தில் ஸ்ரீநாதா வகித்து வரும் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ்., அல்லாத எஸ்.பி.,யான அதிவீரபாண்டியன், காத்திருப்போர் பட்டியலில் இருந்து, எழும்பூரில் உள்ள, மாநில கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் தீரஜ்குமார், நேற்று பிறப்பித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை