உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலையத்துறை டெண்டர் விபரம்; இணையதளத்தில் வெளியிட வழக்கு

அறநிலையத்துறை டெண்டர் விபரம்; இணையதளத்தில் வெளியிட வழக்கு

சென்னை: கோவில்கள், மடங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறநிலைய துறை அரசாணைகள் மற்றும், 'டெண்டர்' அறிவிக்கைகளை, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், உடனுக்குடன் துறையின் இணையதளத்தில் பதிவேற்ற உத்தர விடக்கோரி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இணையதளம் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக் கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, அரசு துறைகளின் அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள் மற்றும் அனுமதிக்கான உத்தரவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், அரசின் இணையதளங்களில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், ஹிந்து அறநிலைய துறை இணையதளத்தில், 2022ம் ஆண்டுக்கு பின், எந்தவொரு தகவலும் புதிதாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. இ தனால், அற நிலையத் துறை நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும், அறநிலையத் துறை கமிஷனர் வசம் உள்ள பொதுநல நிதி குறித்தும், எந்த தகவலும் வெளிப்படையாக தெரிவிக்கப் படுவதில்லை. எனவே, கோவில் கள், மடங்கள், ஹிந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறநிலைய துறையின் அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள் மற்றும் அனுமதிக்கான உத்தரவுகளை உடனுக்குடன் பொது வெளியில் வெளியிட வேண்டும். இவற்றை அறநிலைய துறை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என, உத்தரவிட வேண்டும். அதுவரை டெண்டர் உள்ளிட்ட எந்த ஒரு பணியையும் இறுதி செய்யவோ, எந்த நடவடிக்கைகளிலும் இறங்கவோ கூடாது என, அறநிலைய துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். விசாரணை இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் மற்றும் அறநிலைய துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.ரவிச்சந்திரன், மாநில தகவல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரன் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் அறநிலைய துறை தரப்பில் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை