உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வீட்டு கதவை உடைத்து சவுக்கு சங்கர் கைது; பார் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு

 வீட்டு கதவை உடைத்து சவுக்கு சங்கர் கைது; பார் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு

சென்னை: மதுபான 'பார்' உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரில், 'யு டியூபர்' சவுக்கு சங்கரை, அவரது வீட்டின் கதவை உடைத்து போலீசார் கைது செய்தனர். தி.மு.க., அரசு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக, சவுக்கு சங்கர், அவரது யு டியூப் சேனல்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனால், அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். தற்போது, சவுக்கு மீடியா நிறுவனத்தை சென்னை ஆதம்பாக்கத்தில் சங்கர் நடத்தி வருகிறார். இதற்கிடையே, 'எம்.ஆர்., புரொடக் ஷன்ஸ்' மற்றும் 'வணக்கம் தமிழா மூவிஸ்' சார்பில் மகேஷ் ரம்யா, ஆயிஷா சாதிக் இணைந்து, ரெட் அண்டு பாலோ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். அத்திரைப்படம் குறித்து, தன் யு டியூப் சேனலில் சங்கர் விமர்சனம் வெளியிட்டார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வாயிலாக ஈட்டப்பட்ட பணத்தில், இப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளதாக, அதில் குற்றஞ்சாட்டியிருந்தார். இது ஒரு போதைப்பொருள் படம் எனவும், கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து, சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜூன் மாதம் புகார் கொடுக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், நவ., 2ம் தேதி அவருக்கு 'சம்மன்' அனுப்பினர். அதை சவுக்கு சங்கர் ஏற்காததால், அவரது அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இந்நிலையில், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் முத்துராஜ் தலைமையில் போலீசார், பல்லாவரம் ரேடியல் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சவுக்கு சங்கரை கைது செய்ய நேற்று காலை சென்றனர். போலீசார் வருவதை அறிந்த சவுக்கு சங்கர், உள்ளே இருந்து கதவை தாழிட்டு, 'என்னையும், என் குழுவையும் அநியாயமாக கைது செய்ய பார்க்கின்றனர்' என, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். போலீசார் நீண்ட நேரம் பேச்சு நடத்தியும், 'வழக்கறிஞர் வராமல் கதவை திறக்க மாட்டேன்' என சங்கர் கூறியிருக்கிறார். கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காவிட்டால், கதவை உடைத்து உள்ளே வர வேண்டியிருக்கும் என போலீசார் எச்சரித்தும், கதவை சங்கர் திறக்கவில்லை. பின், தீயணைப்பு வீரர்களை வரவழைத்த போலீசார், அவர்களின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின், வீடு முழுதும் சோதனையிட்டு, ஆவணங்கள், பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேநேரம், அவரது மொபைல் போன் கிடைக்கவில்லை. கைதுக்கு முன், 'திரைப்படத்தை விமர்சித்ததால் கைது' என, சங்கர் கூறி வந்த நிலையில், மதுபான பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்ததால், சைதாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் பகுதியில், ஹரிச்சந்திரன் என்பவர் புதிதாக மதுபான பார் துவக்கியுள்ளார். அந்த பார் பற்றி பொய்யான தகவல்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக, சங்கர் மிரட்டியதாக, போலீசார் கூறுகின்றனர். உரிமையாளரை மிரட்டி, 'ஜிபே' வாயிலாக, 94,000 ரூபாய் பெற்று கொண்டதாக, ஹரிச்சந்திரன் அளித்த புகாரில்தான், சங்கர் கைது செய்யப்பட்டு உள்ளார் என, போலீசார் கூறினர். விசாரணைக்கு பின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சங்கரை, வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V Venkatachalam, Chennai-87
டிச 14, 2025 19:46

திமுக வினர் தீயில் வெந்து துடிக்கிறான்கள் என்பதே உண்மை. எதை தின்றால் பித்தம் தெளியும்? என்னும் நிலையில் உள்ளவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? சங்கரின் குற்ற சாட்டுகளுக்கு பதிலையே காணோமே. அதுக்கு பதில் சொல்ல முடியாத படி கேக் ஷாப்புல புது பன் வாங்கி வாயில் வச்சு அமுக்கியாச்சு.


SUBBU,MADURAI
டிச 14, 2025 15:37

திமுக அரசு இந்த சவுக்கு சங்கரை கைது பண்ணி தூக்கிப் போட்டு மிதிப்பதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.


Sun
டிச 14, 2025 14:51

நேற்று ஏதோ ஒரு சினிமா படத் தயாரிப்பாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கு என்றார்கள்? இன்று ஒரு மது பான பார் உரிமையாளரை மிரட்டிய வழக்கு என்கிறார்கள்? நாளை ஒரு மளிகைக் கடைக் காரரை மிரட்டிய வழக்கு எனச் சொல்வார்களோ? என்னவோ?


N Srinivasan
டிச 14, 2025 14:23

அப்பா என்று அழைக்காமல் உயிர் இல்லையே அப்பாவை அடித்தால் உன் உயிர் இல்லையே.


Ramesh Sargam
டிச 14, 2025 13:27

தமிழகத்தில் தினமும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும், ஊழல் செய்பவர்களையும், மக்களை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களையும், மற்றும் பல குற்றவாளிகளையும் பிடிக்க யோக்கியதை இல்லாத தமிழக போலீஸ் ஒரே ஒரு சவுக்கு சங்கரை பிடிக்க அத்தனை காவலர்களை அனுப்புகிறது. வெட்கம். வேதனை.


Ramesh Sargam
டிச 14, 2025 12:54

பார் உரிமையாளரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யும் தமிழக போலீசே, உங்களுக்கு தைரியம் இருந்தால், பாரத பிரதமரை மரியாதை இல்லாமல் பேசும், அவர் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி கட்டி, பிரதமர் என்றும் மதிக்காமல் GO BACK MODI என்று கையில் பதாகையுடன் வறட்டு கூச்சல் போடும் திமுக குண்டர்களை கைது செய்து வழக்கு போடுவீர்களா...?


Vasan
டிச 14, 2025 10:42

சவுக்குக்கு சவுக்கடி.


Gajageswari
டிச 14, 2025 10:25

நீதிமன்றங்கள் பிறப்பித்த பல ஆயிரம் பிணையில்லா பிடிவாரண்ட் நிறைவேற்றாமல், காவலர் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள். ஆனால் இதற்கு காவவர்கள் எப்படி


திகழ்ஓவியன்
டிச 14, 2025 11:57

அப்போ எப்படி தீபம் ஏற்ற நீதிபதி CSRF அனுப்பினார் அப்படி


பேசும் தமிழன்
டிச 14, 2025 10:11

குண்டு வைக்கும் ஏதாவது தீவிரவாதியை இப்படி எப்போதாவது கைது செய்து இருக்கிறார்களா ???


Krishna
டிச 14, 2025 10:10

If he Speaks/Argues UnPala Truths, His Opponents RulingAlliance Etc MUST ONLY COUNTER his Speech /Arguments in Same Platform INSTEAD of Goondaism incl MisusingPowers esp Police Courts Etc Etc.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை