உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல் கொள்முதல்; செங்கல்பட்டு காஞ்சிபுரம் டாப்

நெல் கொள்முதல்; செங்கல்பட்டு காஞ்சிபுரம் டாப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில், நெல் கொள்முதலில் செங்கல்பட்டு முதலிடம் பிடித்துள்ளது.தமிழகத்தில், சென்னை, நீலகிரி தவிர்த்த மற்ற மாவட்டங்களில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நெல் அதிகம் விளைகிறது.மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.கடந்த, 2024 செப்., 1ல் துவங்கப்பட்ட, நடப்பு நெல் கொள்முதல் சீசன், இந்த ஆண்டு ஆக., 30ல் முடிவடைகிறது.நெல் வழங்கும் விவசாயிகளுக்கு, 100 கிலோ எடை உடைய குவின்டால் சன்னரக நெல்லுக்கு, 2,450 ரூபாயையும், பொது ரக நெல்லுக்கு, 2,405 ரூபாயையும் மத்திய - மாநில அரசுகள் வழங்குகின்றன.நெல் கொள்முதல் செய்ய வசதியாக, 3,703 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது, நெல் வரத்து குறைந்துள்ளதால், 614 நிலையங்கள் மட்டுமே செயல்படுகின்றன.நேற்று முன்தினம் வரை ஒட்டுமொத்தமாக, 4.61 லட்சம் விவசாயிகளிடம் இருந்து, 38.34 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 9,350 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.முந்தைய சீசனில் இதே காலத்தில், 28 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. நடப்பு சீசனில் கூடுதலாக, 10 லட்சம் டன் நெல் கொள்முதலாகி உள்ளது.இந்த சீசனில் அதிகபட்சமாக தஞ்சையில், 6.84 லட்சம் டன், திருவாரூரில், 6.41 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்கள் அல்லாமல், அதிக அளவாக செங்கல்பட்டில் 1.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.அடுத்து காஞ்சிபுரத்தில், 1.08 லட்சம் டன், ஈரோடில், 1.05 லட்சம் டன், மதுரையில், 96,713 டன், திருவள்ளூரில், 95,630 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டாவில் எந்த

மாவட்டத்தில் எவ்வளவு ------------------------ மாவட்டம் - நடப்பு சீசன்(டன்) - முந்தை சீசன்(டன்)---------------------------------------கரூர் - 14,845 - 3,911புதுக்கோட்டை - 1.12 லட்சம் - 65,832திருவாரூர் - 6.41 லட்சம் - 6.31 லட்சம்திருச்சி - 1.35 லட்சம் - 53,749 தஞ்சை - 6.84 லட்சம் - 5.39 லட்சம் கடலுார் - 2.57 லட்சம் - 1.81 லட்சம்பெரம்பலுார் - 26,999 - 16,511அரியலுார் - 77,218 - 56,229 நாகை - 2.14 லட்சம் - 2.14 லட்சம்மயிலாடுதுறை - 2.44 லட்சம் - 2.07 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

lana
ஜூன் 14, 2025 14:17

அதான் சென்னை இல் 3000 கோடி க்கு ஒரு kd பெயரில் பூங்கா திறந்து விடப்படும். நெல்லை பாதுகாப்ப கிடங்குகள் அவசியம் இல்லை. சிலை மணிமண்டபம் கட்ட வேண்டும். இதற்காக ஒன்றிய அரசு பணம் தர வேண்டும் மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.


Kasimani Baskaran
ஜூன் 14, 2025 08:24

கொள்முதல் செய்யும் நெல்லில் பெரும்பகுதி மழையில் அழிந்துவிடுமளவுக்கு போதிய கிட்டங்கி வசதிகள் கூட வெகுவாக வளர்ந்த தமிழகத்தில் இல்லை.