உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள்! மக்களே.. சூதானமா இருங்க!

சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள்! மக்களே.. சூதானமா இருங்க!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் வெள்ள அபாய பகுதிகளில் கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.https://www.youtube.com/embed/tOEjn8bNAkoமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்டங்கள் தோறும் உள்ள கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். சென்னையில் ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரர்கள் பணியில் உள்ளனர்.சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள 203 இடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மழை எதிரொலியாக, சென்னையில் 1860ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த திருவல்லிக்கேணி சட்டம், ஒழுங்கு காவல்நிலையம் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு உள்ளது.தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் உள்ள காவல் நிலையங்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

T. SIVAKUMAR
அக் 15, 2024 12:02

ஆபத்தான பகுதிகள் என்று டபுள் செஞ்சுரி போட்டாச்சு. வெட்ககேடு


M Ramachandran
அக் 15, 2024 09:51

இலவருசும் தன் குடும்பமும் கோலோச்சும் இடம்தான் தமிழ்நாடுமாற பகுதில் வாழ தகுதியற்ற இடமாக கருத படுகிறது


angbu ganesh
அக் 15, 2024 09:40

கடவுள் கொடுக்கறது காப்பாத்திக்க தெரியாமால் இல்ல தெரிஞ்சும் அதை வீணாக்கும் அரசியல் பாவிகள்


raja
அக் 15, 2024 09:37

இப்போவே சொல்லுங்க நல்லுறிலிருந்து அந்த பீச் ரோடு வரைக்கும் ஆட்டோ காரணுவ அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு 300 ருவா வாடகை கேக்குறாநுவோ .... பால் பாக்கட்டு நூதி அம்பது ரூபா ஒரு லிட்டர்.. இந்த பக்கம் வந்து பொது மக்கள் போல் விலை பேசினால் இது வதந்தி அல்ல உண்மை என்பது விளங்கும் திருட்டு மாடல் விடியல் சார்...


Rajarajan
அக் 15, 2024 09:24

ஆக, கடைசிவரை அந்த நாலாயிரம் கோடி என்ன ஆச்சுன்னு, அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறீங்க.


தமிழன்
அக் 15, 2024 17:58

ஏன் அவசர படுறீங்க.. அவை வெளிநாட்டு முதலீடாக மீண்டும் தமிழகத்துக்கு வரும். கருப்பு வெள்ளை ஆகும். உங்கள் சுகம் தூக்கமாகும். மீண்டும் தேர்தல் வரும். ஒட்டு போடாவிட்டாலும் அவர்கள் தான் ஜெயிப்பார்கள்.


தமிழன்
அக் 15, 2024 08:58

தமிழ்நாடு என்றால் அது சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகள் என கைப் பிள்ளைகள் நினைத்துக் கொண்டு இருக்காங்க.. அப்படி இல்லை என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் வரை சிக்கல் இருக்கும்


sundarsvpr
அக் 15, 2024 08:55

ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் நடவடிக்கை இந்த ஆண்டும் எடுக்கப்படுகின்றது. அரசால் அல்லது பொதுமக்களால் நிரந்தர தீர்வு காணமுடியாதா? முடியும். ஏரி கண்மாய் போன்ற இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் வேறு இடங்களுக்கு மாற்றுவதை தவிர வேறு என்ன என்ன நடவடிக்கை எடுக்க இயலும் என்பதனை ஆராய்தல் நல்லது. இயற்க்கையை நம்மால் வெல்ல முடியாது. இதனை அனுசரித்து நடவடிக்கை தேவை.


தமிழன்
அக் 15, 2024 08:54

மக்களை காப்பாற்ற சொன்னால் காவல் நிலையத்தை என்று கேட்டுகிட்டு யாராவது வர போறாங்க.. மக்களிடம் காசு வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினாலும் அவுங்களும் மனுஷங்க தான்... புரிந்து கொள்ளுங்கள்


முக்கிய வீடியோ