வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஏற்றுவது 2000 இறக்குவது 500 என்னங்கடா உங்க நியாயம்?
விலையேற்ற நேரத்தில் கிராமுக்கும் ஆயிரம் ரூபாய் ஏறுகிறது. ஆனால் விலை இறங்கும் போது பவுனுக்கு நூறு ரூபாய் இறங்குகிறது. எல்லாமே வியாபாரம் மட்டும் தான்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.720 குறைந்து, ஒரு பவுன் ரூ.84,080க்கு விற்பனையாகிறது.சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் இரு தினங்களில் மட்டும் 2,240 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. இதன்மூலம், தங்கம் விலை ரூ.85 ஆயிரத்தை கடந்து, வரலாறு காணாத வகையில் உச்சம் பெற்றது. நேற்று ஆபரணத் தங்கம் விலை ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.84,800க்கு விற்பனையாகியது. இந்த நிலையில், இன்று (செப் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ. 84,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.10,510க்கு விற்பனை ஆகிறது.தங்கம் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகளவில் உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் ரூ.1040 குறைந்துள்ளது. அதேபோல, வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.
ஏற்றுவது 2000 இறக்குவது 500 என்னங்கடா உங்க நியாயம்?
விலையேற்ற நேரத்தில் கிராமுக்கும் ஆயிரம் ரூபாய் ஏறுகிறது. ஆனால் விலை இறங்கும் போது பவுனுக்கு நூறு ரூபாய் இறங்குகிறது. எல்லாமே வியாபாரம் மட்டும் தான்.