உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.88 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் இருமுறை உயர்வு

ரூ.88 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் இருமுறை உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (அக்., 01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை இருமுறை அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப் 29), ஆபரண தங்கம் கிராம், 10,770 ரூபாய்க்கும், சவரன், 86,160 ரூபாய்க்கும் விற்பனையானது. சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 86,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இன்று (அக்., 01) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று மாலை பவுனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் ஒரு பவுன் ரூ.720 அதிகரித்து ரூ.87,600க்கு விற்பனையாகி வருகிறது. இதன்மூலம், ஒரு பவுன் ரூ.88 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,480 அதிகரித்து அதிர்ச்சியளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

T.sthivinayagam
அக் 01, 2025 22:01

உபி கும்பமோளா பாஜாக அரசு நடத்தியது தானே அதில் நடந்த இறப்பு குறித்து அண்ணாமலை வாய் திறப்பாறா


தாமரை மலர்கிறது
அக் 01, 2025 19:04

இனியும் வேடிக்கை பார்க்காமல், தங்கத்திற்கான வரியை ஏற்றுங்கள். அப்போது தான் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்யாமல், கார், ஹோட்டல், பைக் என்று செலவிடுவார்கள். அப்போது இந்திய அந்நிய செலவாணி வெளிநாடு செல்லாது. இந்தியாவிலே சுற்றிக்கொண்டு, இந்தியாவின் பொருளாதாரத்தை பெருக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை