உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிஐஜி வருண்குமார் விவகாரம்; சீமானுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

டிஐஜி வருண்குமார் விவகாரம்; சீமானுக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துக்களை கூற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.திருச்சி சரக டிஐஜி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியினர், டிஐஜி வருண்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பொதுவெளியில் ஆதாரம் இல்லாமல் தன் மீது அவதூறு கருத்துக்களை கூறுவதாக சீமான் மீது டிஐஜி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், தனக்கு ரூ.2.10 கோடி மான நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், டிஐஜி வருண்குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், இந்த மனு தொடர்பாக பதில் அளிக்கவும் சீமான் தரப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஆக 02, 2025 21:51

வருண் ஸ்டாலின் அபிமானி. சீமான் ஸ்டாலினின் பி டீம். இதை சீரியசா வேடிக்கை பார்க்கிற ஆட்கள் புத்திசாலிகளல்ல.


raja
ஆக 02, 2025 21:32

இந்த காவல் சில்லரைகள் பொதுமக்களை எளியவர்களை அசிங்கமாக பேசுவது அடிப்பது அதிகார கொலை செய்வது இதற்கெல்லாம் தடை போட முடியாதா நீதிமன்றமே உங்கள் பார்வையில் இதெல்லாம் நீதியா


ஶ்ரீதர், பட்டாபிராம்
ஆக 02, 2025 20:55

இந்த வருண்குமார் ஒரு திராவிஷ கொத்தடிமை, டேவிடசன் தேவாசிர்வாத்த்தோடு சேர்ந்து திருவள்ளூர் எஸ்பியாக இவர் வதைத்த இந்து இயக்க சகோதரர்கள் ஏராளம்


சிட்டுக்குருவி
ஆக 02, 2025 20:53

ஒரு அரசு அதிகாரி பணியில் அவநம்பிக்கை ஏற்பட்டால் அல்லது அவரது நடத்தையிலோ ,பணிவரம்பு மீறலோ இருக்குமாயின் மக்களுக்கு பல வழிமுறைகள் இருக்கின்றன .அவருடைய மேல் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பலாம் .அரசுக்கு புகார் அளிக்கலாம் .அவர்மீதுள்ள அவநம்பிக்கையை மாவட்ட கலெக்டருக்கும் புகாராக அளிக்கலாம் .இல்லையென்றால் கோர்ட் நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால் அவரையோ .அவரது குடும்பத்தினரை பற்றியயோ ஊடகங்களில் அவதூறாக சித்தரிப்பது தனிமனித உரிமையை மீறும்செயலாகும் .குற்றம் நிரூபிக்கப்படாமல் குற்றவாளி என்று கருதி தண்டனை விதிப்பதற்கு சமம் .இதை ஒருபோதும் எந்த ஒரு தனிமனிதரோ அல்லது அரசோ அல்லது அரசின் எந்த ஒரு நிர்வாகமோ அனுமதிக்கக்கூடாது .தனக்கு ஊடகங்கள் கிடைத்துவிட்டது என்று எதைவேண்டுமானாலும் பேசலாம் என்பதை சீமான் அவர்கள் கைவிடவேண்டும் .நீதிமன்றங்கள் தெய்வம் போன்றது . நிதானமாகத்தான் நீதி வரும் .


Anantharaman Srinivasan
ஆக 02, 2025 23:14

.நீதிமன்றங்கள் தெய்வம் போன்றது . நிதானமாகத்தான் நீதி வரும் . நிதானமாக என்றால் எத்தனை வருடம்.?? 30 வருடமா அதற்கும் மேலா..?


m.arunachalam
ஆக 02, 2025 20:31

மெல்ல மெல்ல வருண்குமார் அவர்களை அரசியலுக்கு வரும் நிலைமைக்கு தள்ளி விடுவார்கள் போல் தெரிகிறது .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 02, 2025 20:05

ஏன் இடைக்கால தடை ....முற்றிலும் தடை விதிக்க முடியாதா ??? ஒருவரையோ/குடும்பத்தையோ தரை குறைவாக விமர்சித்தால் அதற்கு இடைக்கால தடை தான் விதிக்க முடியுமா ??? முற்றிலும் தடை செய்ய நீதிமன்றத்திற்கு விருப்பமில்லையா அல்லது சட்டத்தில் இடமில்லையா....


Padmasridharan
ஆக 02, 2025 20:01

சாமியோவ், இவ்வாறு பார்த்தால் நிறைய காவலர்கள் மீது மக்கள் மான நஷ்ட ஈடு வழங்க சட்டத்தை நாட வேண்டி வரும் ஏனென்றால் காவலர்கள் மக்களை ஒருமையில் அசிங்கமாக பேசி, அதட்டி, மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்குகின்றனர். பெற்றோர்களையும் அவதூறு பேசுகின்றனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை