உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 2020ம் ஆண்டு நவ., மாதத்திற்கு பிறகு, தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை நீக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.அரியலூரில் ஊரக வளர்ச்சித் துறையில் 1997 ல் கணிப்பொறி உதவியாளராக தினக்கூலி சம்பளத்தில் நியமிக்கப்பட்ட சத்யா என்பவர், தனது பணியை வரன்முறை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து 12 வாரங்களில் முடிவெடுக்க ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.இதனை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர். சுப்ரமணி மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படாது என தலைமைச் செயலர் மனு தாக்கல் செய்வாரா எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் தலைமைச்செயலர் தாக்கல் செய்த மனுவில், தற்காலிக பணி நியமனங்களை கைவிடுவது என 2020 நவ.,28 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.இதனை பதிவு செய்த நீதிபதிகள், 2020ம் ஆண்டு நவ., மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். இவர்களை நியமனம் செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மார்ச் 17 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M.Srinivasan
பிப் 27, 2025 11:11

வாய்ப்பு இருக்கும் இடங்களில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும்.


அம்பி ஐயர்
பிப் 26, 2025 08:13

அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா....??? எப்படி மடை மாற்றம் செய்வது என்று....???? தற்போதெல்லாம் தற்காலிகப் பணியாளர்கள் என யாரையும் நேரடியாக நியமனம் செய்வதில்லை..... வெளி முகமை எனப்படும் அவுட் சோர்சிங் முறையிலேயே பலரும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.... நேரடியாக அரசு இதில் ஈடுபடாது... அரசுத் துறையும் அந்த வெளிமுகமை நிறுவனமும் மட்டுமே தொடர்பில்.... ஊதியம் அந்த வெளி நிறுவனத்திற்கு வழங்கப்படும்.. அந்த நிறுவனம் அதில் கமிஷன் எடுத்துக்கொண்டு குறைந்த ஊதியமே ஊழியருக்குத் தருவார்... எனவே கனம் நீதி மன்றம் வெளிமுகமை மூலம் பணியில் இருப்போர் அனைவரும் தற்காலிகப் பணியாளர்கள் எனத் திருத்தம் செய்து வழக்கைத் தொடர வேண்டும்... ஏதோ அரசுக்கும் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் பணியாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடிக்கிறார்கள்...


GMM
பிப் 25, 2025 20:22

நிரந்தர ஊழியர்கள் நிரம்பி வழிகின்றனர். தற்காலிக ஊழியர்கள் எப்படி தேவைப்படும். நீதி, நிர்வாக செலவிற்கு ஒரு கட்டுப்பாடு இருக்கும். தேசிய பாதுகாப்பு செலவு ஏதும் இல்லாத மாநில சட்ட பேரவைக்கு அரசியல் சாசன அதிகாரம் அதிகம் கொடுத்து இருக்காது. வக்கீல்களுக்கு நிர்வாக விதிகள் என்றால் வேப்பங்காய். மத்திய அரசு போல் மாநில நிர்வாகம் நிதி, நீதி, உள் துறை .. போன்ற பல இரட்டை துறைகளை ஏற்படுத்தி நிழல் அரசாங்கம் நடத்தி வருகிறது.


சமீபத்திய செய்தி