உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

பல்கலை மாணவி பலாத்காரம்: போலீசுக்கு நீதிபதிகள் சராமரி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலை வன்கொடுமை வழக்கில் போலீசாருக்கு சராமரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cpi5y7ci&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் புகாரை அடுத்து, ஞானசேகரன் என்ற நபரை போலீசார் கைது அவருக்கு மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபருடன் வேறு யாரேனும் இதில் தொடர்பு உடையவர்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் மாணவி பாலியல் வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் போலீசார் விசாரணை குறைபாடு இருப்பதாக தெரிகிறது. வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட போதிலும் sir என்ற சொல்லப்படும் நபர் யார், அவரது பின்னணி என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். எனவே வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் என்பவர் கோர்ட்டில் முறையிட அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடிதத்தையே வழக்காக எடுத்துக் கொண்டு உள்ளது.மேலும் இதன் மீது, உள்துறை செயலாளர், டி.ஜி.பி, மாநகர போலீஸ் கமிஷனர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இதனையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், முதல் தகவல் அறிக்கையை போலீசார் வெளியிடவில்லை. இணையதளத்தில் வெளியான உடன் அது முடக்கப்பட்டு விட்டது. வழக்கு தொடர்பான விரிவானஅறிக்கை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்யப்படும் எனக்கூறியுள்ளது.இந்த வழக்கு இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள்: விசாரணையின் போது ஒருவர் தான் குற்றவாளி என போலீஸ் மிஷனர் எப்படி முடிவுக்கு வர முடியும். ஒரு வழக்கில் மட்டும் தான் ஞானசேகரனுக்கு தொடர்பு உள்ளது என எப்படி முடிவுக்கு வந்தார்.விசாரணை அதிகாரி கமிஷனருக்கு கீழ் பணிபுரிபவர். அவர் எப்படி மற்றொரு குற்றவாளியை கைது செய்வார்.எந்த விதிகளின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியும்.இதற்கு அரசிடம் அனுமதி வாங்கினாரா?காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டு உள்ளது.பேண்டேஜ் போட்டதன் மூலம் அவர் முழு விவரங்களை வெளியிடுவாரா.காவல்துறை தரப்பு: போலீசார் துரத்தியபோது கீழே விழுந்ததால் காலில்பேண்டேஜ் போட்டு உள்ளார்.தலைமை வழக்கறிஞர்: ஞானசேகரன் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் அல்ல. குற்றம்நடந்த 3 நாளில் போலீசாரை பாராட்டாமல் சி.பி.ஐ., விசாரணை கேட்கின்றனர்.நீதிபதிகள்: குற்றத்தை தடுக்க வேண்டியதும், குற்றவாளியை கைது செய்ய வேண்டியது போலீசாரின் கடமை. அதற்காக பாராட்ட வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினர்தொடர்ந்து நீதிபதிகள்: பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார்அளித்ததற்காக பாராட்டுகள். முதல்தகவல் அறிக்கை வெளியனதற்கு யார் பொறுப்பு? எப்படி கசிந்தது?போலீசார்: முதல் தகவல் அறிக்கை கசியவில்லை. வெளியான விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதுநீதிபதி: கசியவில்லை என்றால் ஏன் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நிர்பயா நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து பல்கலை அறிக்கை அளிக்க வேண்டும். மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை என்ன செய்தது. கல்வி நிறுவனங்களை நம்பித்தான் பெற்றோர் குழந்தைகளை அனுப்பி வைத்துள்ளனர். போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டும்.அரசு வழக்கறிஞர்: ஏற்கனவே சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.நீதிபதிகள்: அங்கு பெண்கள் சென்றிருக்கக்கூடாது. ஆண்களுடன் பேசக்கூடாது எனக் கூற யாருக்கும் உரிமையில்லை. பெண்களுக்கு முழு உரிமை உண்டு. காதல், பெண்களின் தனிப்பட்ட உரிமை எனக்கூறினர்.மேலும் மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலை எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், கேள்விகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 103 )

Rangasamy Babu
ஜன 02, 2025 22:06

Annauniversity name shall be change as Tamilnadu University


சிட்டுக்குருவி
டிச 28, 2024 21:14

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் மக்களை காப்பாற்றுவேன் என்று அரசியல் சட்டத்தின் மேல் சாட்சியாக என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்ட ஒரு கொத்தடிமைகூட வாய்திறக்காமல் இருப்பதுதான். மனிதநேயமும் மனசாட்சியும் மாய்ந்துவிட்டதா.சுயமரியாதை எல்லாம் மடிந்துவிட்டதா.செய்யும் தவறுக்கெல்லம் பெரியாரை கவசமாக்குவதை பெரியார் ஏற்பாரா.பகுத்தறிவுக்கு அர்தம் தெரியாமல் பகுத்தறிவாளனாக தன்னைத்தானே பெருமைபடுத்திகொல்வது தனக்கு பெருமைசேர்க்காது. நீங்கள் இடிதுறைப்பர் இல்லா எமரா மன்னர்தான். வாய் பொத்தி இருப்பது மானத்தை இழந்ததாகும்.


sundarsvpr
டிச 28, 2024 17:09

காவல்துறை அமைச்சர் பல்கலைக அமைச்சர் இவர்களுக்கு தெரியாமல் அல்லது அறியாமல் நடந்துள்ளது என்று நீதிமன்றம் கருதக்கூடாது. நீதிமன்றம் இதனை கருத்தில்கொண்டு ஆராயவேண்டும். எந்த புற்றில் பாம்பு இருக்கும் என்ற பழமொழியை மறந்துவிடக்கூடாது.


AMLA ASOKAN
டிச 28, 2024 10:33

அமெரிக்காவின் CDC ரிப்போர்ட்டின்படி 18 வயது பூர்த்தி அடையும் முன்பே 85 % பள்ளி மாணவிகள் கற்பை இழந்து விடுகின்றனர் என்று கூறப்படுகிறது . மாறாக தமிழ் நாட்டில் தமிழர் கலாச்சாரம் , பண்பாட்டின் காரணமாகவும் , தன்மானம் , சுயகட்டுப்பாடு , சுய ஒழுக்கம் காரணமாகவும் 1 % மாணவியர் கூட திருமணத்திற்கு முன் எந்த ஒரு வாலிபனுடனும் அத்து மீறி பழகுவதில்லை . இதை கண்காணிப்பதில் பெற்றோருக்கும் , அவள் படிக்கக்கூடிய கல்லூரிக்கும் மிக பெரிய பங்குண்டு . குடும்பத்தாரை பகைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்வதும் மிக குறைவு . என் மகள் , உன் மகளுக்கு ஏற்பட்டால் தான் வலி தெரியும் என்பதெல்லாம் அபத்தம் . மானத்தை இழந்த அந்த மங்கை , காதல் மோகத்தில் செய்த தவறால் , தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஒரு மாபெரும் களங்கத்தையும் , மனவலியையும் ஏற்படுத்திவிட்டாள் . தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையம் ஏற்படுத்தி விட்டாள் . தமிழகத்தில் நூற்றாண்டுகளாக ஆண்களும் பெண்களும் தங்களுக்கிடையே கண்ணியமாக நடந்து கொள்பவர்கள் என்பது மறுக்க முடியாதது


அப்பாவி
டிச 28, 2024 10:12

அவிங்களுக்கு வேற வேலையில்லை - விடியலார்.


Raj
டிச 28, 2024 08:01

இது விசாரணையில் தான் முடியும். மீண்டும் அந்த கயவனுக்கு ஜாமீன் கொடுக்கும் இந்த நீதிமன்றம். பின்பு அவன் தொழிலில் இறங்குவான். இது தான் இந்திய சட்டம். பாலியல் வழக்கில் பெரிய தண்டனை ஒன்றும் கிடையாது. அதனால் தான் இத்தனை குற்றங்கள் நடக்கிறது. சட்டங்கள் கடுமையாகும் வரை குற்றங்களுக்கு குறைவே இருக்காது. நாம எல்லோரும் வெளிநாட்டு சட்டங்களை பற்றி பேச அருகதைகிடையாது.


அப்பாவு
டிச 28, 2024 07:45

இன்னிக்கி விசாரணையில் மேலும் நூறு கேள்விகள் சரமாரியா கேட்டு வழக்கை 2047 க்கு தள்ளி வெச்சுருங்க. மக்கள் மறந்துருவாங்க. ஞானசேகரன் தெய்வமாயிருவார். மணிமண்டபம் கட்டிரலாம்.


Vijay
டிச 28, 2024 07:24

திமுககாரர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு


A.Muralidaran
டிச 28, 2024 07:17

I don’t கேர் ஆட்சியில்


T.sthivinayagam
டிச 28, 2024 06:53

தாமாக முன் வந்து வழக்கு விசாரணை நடத்த ஏன் இத்தனை கால தாமதம் நீதிமன்றக்கள் ஜாதி மதம் கட்சிகள் என்ற எந்த நிர்பந்தத்துக்கும் ஆளாகாமல் நீதியை நிலை நிறுத்த மக்கள் அனைவரும் வேண்டுகின்றனர்


veera
டிச 28, 2024 07:13

உன்னையும் இப்படி முட்டு குடுத்து பிழைக்காமல் உழைத்து வாழுமாரு மக்கள் கேட்டு கொள்கின்றனர்


முக்கிய வீடியோ