உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் ரத்தாகுமா: தமிழக அரசின் மனுவை இன்று விசாரிக்கிறது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் ஊட்டி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவை சென்னை ஐகோர்ட் இன்று விசாரிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு மே, 7ம் தேதி முதல் இ -- பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. அதில், உள்ளூர் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில், கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த, ஏப்., 1 முதல் ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் அனுமதிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், இந்த உத்தரவு காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இ பாஸ் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இம்மனுவை இன்று விசாரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KRISHNAN R
ஏப் 03, 2025 22:05

"என்ன இப்ப நான் சொல்றது...... அது வந்து......."


சோழநாடன்
ஏப் 03, 2025 18:45

பொதுமக்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லை.வாங்கிய பாஸ்-ஐ காட்டிவிட்டு செல்ல வேண்டும். அதற்கு நேரம்தான் ஆகும். அதுவே கஷ்டம் என்று வரம்பை நீக்கி விட்டால் மொத்த சுற்றுச்சூழலும் கெட்டுவிடும்.மேலும்,அங்கே உள்ள வியாபாரிகள் கடையடைப்பு என்று மிரட்டுவதற்கு அரசு பயந்துவிட்டது என்றே நம்பவேண்டி உள்ளது. எதற்காக நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய கேட்கவேண்டும். நீதிமன்றம் இதில் உறுதியாக இருந்து சுற்றுச்சூழலைக் காக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை