உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் மகன் செய்தது சரி என்று சொல்ல மாட்டேன்; டாக்டரை கத்தியால் குத்தியவரின் தாய் சொல்வது இதுதான்!

என் மகன் செய்தது சரி என்று சொல்ல மாட்டேன்; டாக்டரை கத்தியால் குத்தியவரின் தாய் சொல்வது இதுதான்!

சென்னை: ''என் மகன் செய்ததை சரி என்று கூறவில்லை. எனக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதனையில் என் மகன் அப்படி செய்து விட்டான்,'' என்று டாக்டரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் பிரேமா கூறினார்.சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கைதான இளைஞர் விக்னேஷிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ji6dnm6l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கைதான இளைஞர் விக்னேஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து டாக்டர் பாலாஜியிடம் கேட்டேன். மருத்துவ செலவுக்கான பணத்தை தருமாறு டாக்டர் பாலாஜியிடம் கேட்டதால், அவர் என்னை கீழே தள்ளினார். இதனால், அவரை கத்தியால் குத்தினேன், எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து விக்னேஷின் தாயார் பிரேமா கூறியதாவது: எனக்கு 3 பசங்க இருக்கிறார்கள். போன ஆண்டு நவம்பரில் எனக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தேன். அப்போது, எனக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக 3 லட்சம் ஆகும் என்று கூறியதால், வீட்டுக்கு வந்து விட்டோம். அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்கள். ஆனால், அங்கு 95 ஆயிரம் செலவு செய்தேன். டிசம்பர் 30ம் தேதி ஊசி போட்டார்கள். அடுத்த ஊசி போட்டுக் கொள்ள மாட்டேன் என்று கூறி, ஜனவரி 1ம் தேதி வீட்டுக்கு வந்தேன். நந்தினி எனும் தெரிந்த நர்ஸ் சொன்னதை கேட்டு, கிண்டி மருத்துவமனைக்கு சென்று பாலாஜி எனும் டாக்டரை பார்த்தேன். ஜனவரி 10ம் தேதி இங்கேயே எல்லா ஊசியை போட்டுகிறியாமா என்று டாக்டர் பாலாஜி கேட்டார். எனக்கு 2வது ஸ்டேஜ்னு சொன்னாரு. அதுப்புறம் 5வது ஸ்டேஜ்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் 14ம் தேதி வந்து அட்மிட் ஆனோம். 14, 15, 16, 17, ஆகிய தேதிகளில் ஊசி போட்டு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. கீமோ சிகிச்சையின் போது, உடம்பு பிரச்னை குறித்து சொன்னால், அசிங்கம் அசிங்கமா திட்டுவார். கேன்சர் என்று சொல்லாமல், காய்ச்சல் என்று சொல்லி காலை 10 மணி முதல் 5.30 மணி வரை உட்கார வச்சு அனுப்பீட்டாங்க. அப்போது, அங்கிருந்து தலைமை டாக்டர் சொன்னதனால், எனக்கு சிகிச்சை கொடுத்தாங்க. 18 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். விருகம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் 2 மாதம் சிகிச்சை பெற்றேன். அங்கு மருத்துவர் பரிந்துரைப்படி, சபிதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றேன். அங்கு என்னை காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. என்னுடைய உடம்பில் என்ன பிரச்னை என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்து இருக்க வேண்டாமா? ஒரு செல்போனில் வரும் பிரச்னையை நம்மால் கண்டு பிடிக்க முடியும் போது, 25 ஆண்டு கால அனுபவமிக்க டாக்டருக்கு என் உடம்பில் உள்ள பிரச்னையை கண்டுபிடிக்க முடியாதா?5 கீமோ சிகிச்சை வரையில் என்னுடைய நுரையீரல் நன்றாக இருந்தது. அதன்பிறகு தான் பழுதானது. கடந்த 10 நாட்களாக என் மகன் என்னை பார்த்து ரொம்ப கஷ்டப்பட்டான். எனக்கு உடை எல்லாம் அவன் தான் மாற்றி விடுவான். நான் பிழைக்க மாட்டேன் என்று டாக்டர்கள் கூறியதால், அந்த மனவேதனையில் இருந்திருப்பான். நான் படும் கஷ்டத்தை பார்த்து இப்படி செய்து விட்டானோ? என்னுடைய மகன் நேரடியாக கத்தியால் குத்தி விட்டான். பொய் இல்லாமல் உண்மையை சொல்றேன். இங்க 3 பேரு வந்து வீட்டை சோதனை பண்ணி, என்னுடைய பைல் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க. 6வது மாதம் நுரையீரல் பழுதான ஸ்கேன் எல்லாம் அதுல தான் இருக்கு. இப்ப அதனை எடுத்துட்டு போய்ட்டாங்க. நான் கிண்டி மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது, அந்த பைல்ல அது எல்லாம் இல்லைனா, நாம் சும்மா விடமாட்டேன்.எங்க அம்மாவுக்கு நுரையீரல் பழுதானதை பார்த்து ஏன் சொல்லவில்லை என்ற கோபம் தான் என் மகனுக்கு. அந்த ஸ்கேனை அவரு பார்த்திருந்ததால், இப்படி நடந்திருக்குமா? என் மகன் செய்ததை சரி என்று சொல்லவில்லை. ஆனால், டாக்டர் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டுவார். நோட்டை தூக்கி வீசியடித்தார். நான் டாக்டரா, நீ டாக்டரா என்று அடிக்கடி கேட்பார். எனது 2வது மகன் ஆளை கூப்பிட்டு போலாம் என்று சொன்னான். நான் வேணாம் என்று சொல்லி விட்டேன். எனக்கே கடும் கோபம்தான்.இவ்வாறு பிரேமா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Matt P
நவ 15, 2024 02:27

அரசியலுக்காக இதை நான் சொல்லவில்லை. எவன் வந்தாலும் இப்படிதான் இருப்பான் என்ற எண்ணமும் எனக்கு உண்டு. ஆட்சியை மாற்றுங்க அப்படியாவது எல்லாவற்றுக்கும் தீர்வு கிடைக்குமா என்று பாப்போம். தலைமை சரியா இருந்தால் வால் வரைக்கும் எல்லாம் சரியா இருக்கும். ஒருதனுக்காய் அதுவும் பணம் கொடுத்து ஆட்சியை பெற்றால் அனுபவித்து தான் ஆகணும்.


Matt P
நவ 15, 2024 02:18

டாக்டர் கீழஎ தள்ளி விட்டதால் கத்தியால் குத்தினேன். டாக்டர் தள்ளி விடுவார் என்று தெரிந்து கத்தியை தயாராய் வைத்திருக்கிறார் போலிருக்கிறது. புற்று நோய் குணமாக்குவது எளிதல்ல என்பது தெரிகிறது . அமெரிக்கா என்றால் எந்த நோயும் குணமாகி விடுவார்கள் என்று பிரபலங்கள் உட்பட இங்கே வருகிறார்கள். புற்று நோய் இங்கு வந்தாலும் தற்காலிக குணமஆக்கல் அல்லது முயர்ச்சி என்று தான் இங்கும் வஆழ்கிறது. முதலில் புற்றுநோய் மையத்துக்கு சென்றவர்கள் ஏன் கிண்டி அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும்? அடையாறு புற்று நோய் மையத்திலேயே தொடர்ந்திருக்கலாமே. யாரோ ஒரு செவிலி அவரிடம் பணம் கொடுத்தால் சரியாகி விடும் என்று சொன்னதற்காக அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பணமா கொடுத்தது தவறு. அரசு மருத்துவ நிலையங்களிலேயே பணம் பறிப்பதற்கு என்று மருத்துவர்களே இருப்பது வேதனைக்குரியது. அந்த அம்மா சொல்வது எல்லாவற்றையும் நான் நம்புகிறேன். ஏற்கெனெவே வலியில் துடித்து கொண்டு பணத்தை கடன் வாங்கியோ எப்படியோ இவர்களிடம் கொடுத்து காப்பாற்றப்பட வேண்டும் வருகிறவர்களை அவர்களுக்கு தெரியாத ஏங்கிலிஷில் திட்டுவதும் தவறாக தெரியவில்லையா? பணத்தை பறி கொடுத்து விட்டோம் என்ற வேதனையில் கத்தியை தீட்டி விட்டார். கத்தியை எடுப்பதும் மேலும் பிரச்னையை பெரிதாக்க்க செய்யுமே தவிர அது தீர்வாக அமைந்து விடாது. எப்படியோ யாரையும் யார் எந்த வகையிலும் துன்புறுத்துவதும் தவறு தான். அந்த செவிலி இடைதரகராக இருக்கலாம்.


Madras Madra
நவ 14, 2024 11:37

அம்மாவை இழந்து விட போகிறோம் என்று ஒரு மகனுக்கு தெரிய வருவது எவ்வளவு பெரிய கொடுமை அவன் நிலை உணராமல் அவனை தர்ம அடி அடித்த மருத்துவ மனை ஊழியர்களுக்கு என்ன தண்டனை ? வயதில் சிறிய அவரை இன்னும் கொஞ்சம் பரிவுடன் நடத்தி இருக்கலாம் .


R.P.Anand
நவ 14, 2024 11:22

எல்லோருக்கும் மெடிக்கல் இன்சூரன்ஸ் பண்ணி தனியருக்கு அனுப்புங்கள். அரசு ஆஸ்பத்திரிக்கு இழுத்து மூடவும்.


Logesh Nathan
நவ 14, 2024 09:30

கேன்சர் வருமா அப்போ நீ யன்னபெறவீ


Kasimani Baskaran
நவ 14, 2024 05:49

பணத்துக்காக எதையும் செய்யதங்காத திராவிடர்கள் ஆட்சி - தொடர்ந்து அரை நூற்ராண்டுகளாக நடக்கிறது. மருத்துவக்கல்வியை சேதப்படுத்தினர் - அதன் பலன்தான் இது. கூடுதலாக புற்று நோய் என்பது உயிரைக்குடிக்கும் நோய். விதி வலியது.


Ravi Dmurthy
நவ 14, 2024 01:25

அவர் அமெரிக்கா சென்று கற்றார், ஆனால் அவர் தனியார் பயிற்சிக்கு செல்லவில்லை. அவர் தனது சேவையை ஏழை மக்களுக்காக செலவிட விரும்பினார், அதனால் அவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றினார். பொய்களை பரப்ப வேண்டாம். அவர் இரவும் பகலும் படித்தார், அவரது குடும்பம் அந்த நேரத்தில் போராடியது. அவர் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லை. தன்னலமற்ற சேவைக்கு மரியாதை காட்டுங்கள். அவர்கள் மிகவும் அழுத்தத்தில் உள்ளனர். நோயாளிகளை இழந்தால் மருத்துவர்கள் அழுவதை நான் பார்த்திருக்கிறேன், புற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது எளிதல்ல.


Sk Sk
நவ 14, 2024 01:00

60 ஆண்டு திராவிட ஆட்சியில் , மக்கள் தொகை வளர்ந்த அளவுக்கு மருத்துவமனைகள் அதிகரிக்க வில்லை. இந்த குறைபாடு மிகவும் வெட்கக்கேடு . பலப்பல கோடி ரூபாய்கள் ஊழலில் என்று விடுகின்றன. அரசு மருத்துவமனைகள் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் விரும்பி வந்து வேலை செய்யும் அளவுக்கு தரமானதாக இருக்க வேண்டும்.


rama adhavan
நவ 14, 2024 00:32

கம்பிக்குப் பின்னால் டாஸ்மாக் சரக்கு விற்பது போல் இனி கம்பிக்குப் பின்னால் தான் மருத்துவமும் பார்க்கவேண்டும்.


Ganapathy
நவ 13, 2024 20:39

வாய்கொழுத்த ஈனப்பிறவிகளுக்கு கேன்சர் கட்டாயமாக வரும்.


Suresh Gurusamy
நவ 14, 2024 14:32

யோவ் கணபதி, உலகம் ஒரு வட்டம். உனக்கு வாய் இருக்குனு உலறுதல் கூடாது. உன் குடும்பத்துல கேன்சர் வராது என்று உன்னால உறுதியா சொல்ல முடியுமா?


முக்கிய வீடியோ