உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. சென்னையின் 386 ஆவது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சிங்காரச் சென்னைக்கு சிறப்பு சேர்க்கும் அனைவருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.சென்னை தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: https://x.com/mkstalin/status/1958718527403434048எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து,சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து,மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386. சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

தமிழ்வேள்
ஆக 22, 2025 20:52

சென்னை என்பது வெறும் ஊரல்ல..தனியே ஒரு யூனியன் பிரதேசம் ஆக்கப்பட வேண்டிய பகுதி.... யூனியன் பகுதி ஆனால் சென்னை நன்றாக இருக்கும்.... ஆனால் திராவிடம் நாறிப் போய் விடும்..


Chandru
ஆக 22, 2025 19:02

ஸ்டாலின் அங்கிள் இனிமேல் உங்க தமிழ் எல்லாம் தமிழ் நாட்டில் எடுபடாது . பை பை ஸ்டாலின்


Rajasekar Jayaraman
ஆக 22, 2025 18:57

அதனால்தான் எல்லாம் இலவசமோ.


theruvasagan
ஆக 22, 2025 17:53

இதயம்தான். ஆனால் துடிப்பு சரியாக சீராக இல்லையே. பேஸ் மேக்கர் வைத்து சரி பண்ணுவது அவசியம்.


என்றும் இந்தியன்
ஆக 22, 2025 17:27

தமிழகத்தின் இதயத்துடிப்பா???இல்லை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பா எது சரியான பதம் சொல்


VIDYASAGAR SHENOY
ஆக 22, 2025 16:49

ஒரு முதல்வர் இப்படி பேச கூடாது மற்ற மாவட்டத்தை சிறுமை படுத்துவது போல் உள்ளது.


Kjp
ஆக 22, 2025 15:13

சென்னை தமிழகத்தின் தலைநகர் மட்டுமல்ல தமிழகத்தின் இதயம் .இது எப்படி இருக்கு..


V RAMASWAMY
ஆக 22, 2025 14:56

அதானால் தான் அடிக்கடி ...


Nagarajan D
ஆக 22, 2025 13:56

இந்த கேடுகெட்ட அரசியல் வியாதிகளுக்கு திருவொற்றியூரிலிருந்து தாம்பரம் வரை மட்டுமே தமிழகம்.. 1000 கோடி நிதிநிலை அறிக்கை இருந்தால் வெறும் 900 கோடி மட்டுமே இந்த விளங்காத ஒரேயொரு ஊருக்கு கொடுத்துடுவானுங்க மற்ற எல்லா மாவட்டத்திற்கும் சேர்த்து 100 கோடி ருபாய் ஒதுக்குவானுங்க விளங்காத ராமசாமி வாரிசுகள்..


கடல் நண்டு
ஆக 22, 2025 13:53

புரிஞ்சவன் பிஸ்தா..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை