உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள்: கைது செய்தது சென்னை போலீஸ்

டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள்: கைது செய்தது சென்னை போலீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இணையவழியில், 'டிஜிட்டல்' கைது செய்து, பண மோசடி செய்ய பயன்படுத்தும், 'சிம் பாக்ஸ்' கருவிகளுடன், டில்லியில் பதுங்கி இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் பதுங்கி, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்த சைபர் குற்றவாளிகளை கைது செய்ய, மாநில சைபர் குற்றப் பிரிவு போலீசார் கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ukztvh7f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, சென்னையில் பதுங்கி இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறுஞ்செய்தி மற்றும், 'லிங்க்' அனுப்பும், 15 'சிம் பாக்ஸ்'கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைதான நபர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து, 'சிம் பாக்ஸ்'களை அழித்ததும் தெரியவந்தது. மேலும், இவர்களின் கும்பல் தலைவனாக, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோஹல் அலாம் நுத்தீன் என்பவர் செயல்பட்டு வருவதும், இவர் தன் கூட்டாளிகளை, டில்லி, மும்பை மற்றும் பீஹாரில் பதுங்க வைத்து, அவர்கள் வாயிலாக பண மோசடி செய்து வருவதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்ய, எஸ்.பி., ஷஹானாஸ், டி.எஸ்.பி.,க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகளை அமைத்த மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல், அப்படையினரை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தார். இவர்கள், டில்லி, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பீஹாரில் சோதனை நடத்தினர். அப்போது, டில்லியில் பதுங்கி இருந்த தாரிக் அலாம், 19; லோகேஷ்குமார், 33; அசோக்குமார், 40, ஆகியோரை கைது செய்தனர். கைதான நபர்களிடம் இருந்து, மொத்தம், 44 'சிம் பாக்ஸ்'களை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சோஹல் அலாம் நுத்தீனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

JaiRam
அக் 06, 2025 12:18

சிறுபான்மை மக்களால் தேர்தெடுக்கபட்ட அரசு இப்படி செய்வது சரியா குருமா மற்றும் சைக்கோ கடும் கண்டனம்


Mecca Shivan
அக் 06, 2025 07:33

இவர்கள் படித்தால் என்ன நடக்கும்


K.V.K.SRIRAM
அக் 06, 2025 06:40

Excellent work. Stolen money should be recovered and restored, besides getting the criminals punished as per law. Its sad that despite many awareness campaigns, people still make mistakes and lose their hard earned money. Like health advisory slides in movies, cyber advisories should also be screened, to reach larger audiences.


Barakat Ali
அக் 06, 2025 05:34

நாட்டில் 15 சதவிகிதம் மட்டுமே இருக்கும் இஸ்லாமியர்கள் குற்றங்களில் 30 முதல் 40 சதவிகிதம் இருப்பதாகத் தோன்றுகிறது .... பெரும்பான்மையினர் முன்னிலையில் சாயம் வெளுக்கிறது .... இதை இஸ்லாமியர்கள் கண்டிக்க வேண்டும் .....


Field Marshal
அக் 06, 2025 06:53

நீங்க கண்டிக்கிறீங்களா இல்ல பசுத்தோல் போத்திய புலியா ?


Mecca Shivan
அக் 06, 2025 07:35

செய்யிறது திருட்டு, கடத்தல், தேசத்துரோகம், போதை வாஸ்து வியாபாரம், தீவிரவாதம், மதவாதம். இதுக்கு மெடலா கொடுப்பாங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 06, 2025 08:23

ஆக சாயம் வெளுத்துப் போவதுதான் உறுத்துது >>>>


Bahurudeen Ali Ahamed
அக் 06, 2025 12:04

சகோ தவறு செய்தவன் இஸ்லாமியனாக இருந்தாலென்ன ஹிந்துவாக இருந்தாலென்ன குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை தரப்படவேண்டும் அவ்வளவுதான், இதுலயும் வந்து உங்கள் கோணல் புத்தியை காட்டவேண்டாம்


Kasimani Baskaran
அக் 06, 2025 03:56

சைபர் கிரிமினல்களை அமுக்கிய விதம் பாராட்டத்தகுந்தது...


சமீபத்திய செய்தி