உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மழை குறைந்ததால் மாறியது காட்சி; வெள்ள நீர் அகற்றும் பணி தீவிரம்

மழை குறைந்ததால் மாறியது காட்சி; வெள்ள நீர் அகற்றும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் மழையின் போது தண்ணீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவில மையம் கொண்டு, 12 கி.மீ.,வேகத்தில் நகர்ந்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tr8ah4zh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. 30 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல காட்சி அளித்தது.அதீத கனமழை அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சென்னையில் மண்டலங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டன.இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. எஞ்சிய 103 இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றம் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.2 நாட்களாக பெய்த மழையின் போது 54 மரங்கள் விழுந்திருந்தன. அவை அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. 27 இடங்களில் 300 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 944 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5657 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கனோஜ் ஆங்ரே
அக் 16, 2024 11:55

ஆமாம்... தினமலரே, இது புயல் இல்லென்னு மத்திய வானிலை மையம் சொல்லுது... நீயும் நேத்துலந்து புயல், புயல், புயல் வருது..ன்னு புளுகிகிட்டிருக்கே...? அப்படி ஒரு நல்லெண்ணமா...? சும்மாவாச்சும் மீடியா மாதிரி பீதிய கிளப்பி விடுற...? வளிமண்டல சுழற்சிக்கும் புயலுக்கும் சம்பந்தம் உண்டா...?


Rajathi Rajan
அக் 16, 2024 11:01

நீ எதிர் பார்த்த ஒண்ணும் நடக்கவில்லை என்ற உமது மன வருத்தம் நன்றாகவே புரிகிறது... நமது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை